This Article is From Aug 14, 2018

கேரளாவில் விடாது பெய்யும் மழை..!

கேரளாவில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த சில நாட்களுக்கும் அங்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

கேரளாவில் விடாது பெய்யும் மழை..!
New Delhi:

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கேரளாவில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த சில நாட்களுக்கும் அங்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதேபோல, இமாச்சல பிரதேச மாநிலத்திலும் நல்ல மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக, சிம்லாவில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. நேற்று சிம்லாவில் அடை மழை கொட்டியது. 117 ஆண்டுகளில் இல்லாத வகையில் அந்த மழை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இமாச்சல பிரதேச மாநிலம் முழுவதிலும் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பொழிவு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. 

கேரளாவைப் பொறுத்தவரை, பல்லாயிரக் கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். 

இந்திய அளவில் கோவா, கொங்கன் பகுதி, கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல உத்தரகாண்டிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழை குறித்து பேசியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘கனமழையால் இதுவரை 20,000 வீடுகளுக்கு மேல் பாதிப்படைந்துள்ளது. 10,000 கிலோ மீட்டர் அளவிலான சாலைகள் சேதமடைந்துள்ளது. 30,000 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு அரசு சார்பில் நடத்தப்பட இருந்த ஓணம் பண்டிகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஆகும் செலவை, நிவாரணங்களுக்குப் பயன்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இன்றும் கேரளாவின் சில இடங்களில் கனமழை பெய்து, அதனால் நிலச்சரிவு ஏற்படும் சம்பவங்கள் நடந்துள்ளது.

.