குரங்ககை பிடிக்க முயலும் சிறுத்தை! சிக்காத குரங்கு!! அரிதான வீடியோ

"அளவு, வலிமை மற்றும் கொண்டிருந்தாலும் சில வேட்டைகளுக்கு கூடுதல் யுக்தி தேவைப்படுகிறது" என்று நந்தா மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் இந்த வீடியோவை பகிரும்போது குறிப்பிட்டிருந்தார்.

குரங்ககை பிடிக்க முயலும் சிறுத்தை! சிக்காத குரங்கு!! அரிதான வீடியோ

சிறுத்தை ஒரு மரத்திலிருந்து ஒரு குரங்கை பிடிக்க முயற்சிக்கிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் பல பழையை நினைவுகளை நாம் மீண்டும் ஒரு முறை நினைத்து பார்த்து மகிழ்ந்துக்கொள்கின்றோம். அது போல 2013 காலக்கட்டங்களில் வெளியான பிரபல வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. இந்த காட்சியை இன்று காலை ட்விட்டரில் இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தா வெளியிட்டுள்ளார், இதுபோன்ற காட்சி இயற்கையில் "அரிதாகவே காணப்படுகிறது" என வீடியோவை வெளியிட்டு கூறியிருந்தார்.

மரக்கிளையின் விளிம்பில் இருக்கும் குரங்கை சிறுத்தை ஒன்று பிடிக்க முயற்சிக்கும் காட்சி 2013-ல் தென்னாப்பிரிக்காவில் சாபி சாண்ட்ஸ் கேம் ரிசர்வ் பகுதியில் கேரி பார்க்கர் என்பவரால் பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோவில் சிறுத்தை குரங்கை பிடிக்க மரத்தின் மீதேறி குரங்கு தொங்கிக் கொண்டிருக்கும் கிளையை உலுக்க முயற்சிக்கின்றது. ஆனால், மரத்தில் வாழும் குரங்குகளை போல நிலத்தில் வாழும் சிறுத்தையின் பாதங்கள் பரிணாமமடையவில்லை என்பதால் சிறுத்தையால் குரங்கு தொங்கிக் கொண்டிருக்கும் கிளையை சரியாக அசைக்க முடியவில்லை.

வீடியோவை காண

18 விநாடிகள் படமாக்கப்பட்ட இந்த வீடியோவின் இறுதியில் சிறுத்தை குரங்கை வேட்டையாடாமல் தோற்று கீழிறங்குவதை காண முடிகிறது. ஆன்லைனில் ரேஞ்சர் டைரிஸ் என்ற சுற்றுச்சூழல் குழுவால் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை பலரும் ஆச்சரியமாக கண்டு ரசித்தனர்.

"அளவு, வலிமை மற்றும் கொண்டிருந்தாலும் சில வேட்டைகளுக்கு கூடுதல் யுக்தி தேவைப்படுகிறது" என்று நந்தா மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் இந்த வீடியோவை பகிரும்போது குறிப்பிட்டிருந்தார்.

ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஒரு மணி நேரத்தில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். பலர் தங்களது கருந்துகளை பகிர்ந்துள்ளனர்.

"பார்க்க சிலிர்ப்பாக இருக்கிறது" என ஒரு பயனர் கூறியுள்ளார்.

“ஆஹா அருமையான காட்சி“ என மற்றொரு பயனர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

Click for more trending news