This Article is From Nov 05, 2018

குஜராத் தலைமை செயலகத்தில் புகுந்த சிறுத்தைப் புலி

சிசிடிவி கேமராவில் தலைமைச் செயலகத்திற்குள் சிறுத்தைப் புலி வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

குஜராத் தலைமை செயலகத்தில் புகுந்த சிறுத்தைப் புலி

கேட்டின் அடிப்பகுதியின் வழியே உள்ளே வரும் சிறுத்தை

Ahmedabad:

குஜராத் மாநில அரசின் தலைமை செயலகம் காந்தி நகரில் அமைந்துள்ளது. இதன் வளாகத்திற்குள் சிறுத்தைப் புலி ஒன்று வருவது போன்ற காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. அந்த காட்சியில், தலைமை செயலக கேட்டின் அடிப்பகுதியின் வழியே சிறுத்தை உள்ளே வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தலைமை செயலக வளாகத்தில் உள்ள வீடுகள், சட்டசபை கட்டிடம் உள்ளிட்டவை மிக முக்கியமான பகுதிகள். அங்கு வசிக்கும் தலைமை செயலக ஊழியர்களுக்கு சிறுத்தை நுழைந்தது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “ தலைமை செயலக வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தை எங்கு சென்றது என்று தெரியவில்லை. நாங்கள் அதை பிடித்து விடுவோம். அல்லது அந்தப்புலி தலைமை செயலகத்தை விட்டு வெளியே சென்று விட்டதை உறுதி செய்வோம்” என்றார்.

தேடுதல் வேட்டையின்போது பேட்டியளித்த வனத்துறையினர், “ தலைமைச் செயலக வளாகத்தில் இருக்கும் அனைவரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். இங்கு பல அதிகாரிகள் உள்ளனர். இந்த பிரச்னை முடிந்ததும், இங்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்போம்” என்றனர்.

இந்தநிலையில், இன்று மதியம் தலைமைச் செயலக வளாகத்தை விட்டு சிறுத்தைப்புலி வெளியேறி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.