குடிசை வீட்டில் குட்டிகளை ஈன்ற சிறுத்தை: வீடியோ உள்ளே

குடிசை வீட்டில் சிறுத்தைக் குட்டிகளுடன் தாய் சிறுத்தை இருக்கும் வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

குடிசை வீட்டில் குட்டிகளை ஈன்ற சிறுத்தை: வீடியோ உள்ளே

குடிசை வீட்டில் குட்டிகளை ஈன்ற சிறுத்தை

மகாராஷ்டிராவில் சிறுத்தை ஒன்று குடிசை வீட்டில் நான்கு குட்டிகளை ஈன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள லகத்புரி என்ற பகுதியில் பல குடிசை வீடுகள் உள்ளன. கடந்த செவ்வாயன்று இங்குள்ள ஒரு குடிசை வீட்டில் சிறுத்தை ஒன்று நான்கு குட்டிகளை ஈன்றது. இதையறிந்த கிராமவாசிகள் உடனே வனத்துறையிடம் தெரிவித்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தைக் குட்டிகளைப் பார்வையிட்டனர். ஆனால், அப்போது அந்த இடத்தில் தாய் சிறுத்தை இல்லை. இதனால் குட்டிகள் மட்டும் குடிசை வீட்டில் கத்திக் கொண்டு இருந்தது. 

இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரி கணேஷ் ராவ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிறுத்தை நான்கு குட்டிகளை ஈன்றுள்ளதாகவும். அவை அனைத்தும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக கூறினார். மேலும், குட்டிகளை மாற்று இடத்தில் கொண்டு செல்வதற்காக தாய் சிறுத்தைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். 

குட்டிகளுடன் இருக்கும் சிறுத்தை வீடியோ:

குடிசை வீட்டில் சிறுத்தைக் குட்டிகளுடன் தாய் சிறுத்தை இருக்கும் வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 89 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.. 

ரந்தம்போரே தேசிய பூங்காவின் கூற்றுபடி, இந்தியாவில் சிறுத்தை ஆபத்தான மற்றும் குறைந்த வரும் விலங்கினப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. 

Click for more trending news