This Article is From Jul 24, 2019

‘சட்ட விரோத உறவு’ வைத்துக் கொண்டதால் கைவிடப்பட்ட நாய்

அக்கம் பக்கத்திலுள்ள ஒரு நாயுடன் சட்ட விரோதமாக உறவு வைத்திருந்ததால் இதை கைவிடுகிறேன்” என்று அந்த குறிப்பில் எழுதப்பட்டிருந்தது.

‘சட்ட விரோத உறவு’ வைத்துக் கொண்டதால் கைவிடப்பட்ட நாய்

திருவனந்தபுரத்தில் உரிமையாளரால் கைவிடப்பட்ட நாய்

Thiruvananthapuram:

கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஒரு நாய் தன் உரிமையாளரால் கைவிடப்பட்டது. அதன் காலரில் ஒரு வித்தியாசமான குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது.  குறிப்பில் இந்த நாய் அருகில் இருந்த மற்றொரு நாயுடன் சட்டவிரோதமாக உறவு வைத்திருந்ததால் இதை கைவிடுவதாக குறிப்பிட்டிருந்தது. 

மலையாளத்தில்  அந்த குறிப்பு எழுதப்பட்டிருந்தது.  “இது ஒரு வெள்ளை பொமரேனியன், நகரத்தின் பிரபலமான மார்க்கெட்டுக்கு வெளியே கண்டுபிடித்தாக  கூறினர்,

இந்த நாயை விலங்கு தன்னார்வலரான ஷமீன் இந்த நாயை மீட்டார். அவர் இந்த குறிப்பை படித்து பார்த்ததும் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டார்

மலையாளத்தில் எழுதப்பட்ட குறிப்பு பின்வருமாறு “இந்த நாய் நல்ல ஒரு இனம். இதற்கு அதிகளவு உணவு தேவையில்லை.இதற்கு எந்த நோய்களும் இல்லை. ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குளிக்கும். யாரை பார்த்தாலும் குறைக்கும். 3 ஆண்டுகளில் யாரையும் கடித்ததில்லை. முக்கியமாக பால், பிஸ்கட் மற்றும் முட்டைகளை  உணவாக கொடுக்கலாம். அக்கம் பக்கத்திலுள்ள ஒரு நாயுடன் சட்ட விரோதமாக உறவு வைத்திருந்ததால் இதை கைவிடுகிறேன்” என்று அந்த குறிப்பில் எழுதப்பட்டிருந்தது.

நாய் சுற்றித் திரிவதை அறிந்து அந்த இடத்திற்கு சென்று அழைத்து வந்துள்ளார் ஷமீன்.  இதை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

3bkag1m

விலங்கின ஆர்வலர் ஷிமீன் நாயை கண்டுபிடித்து கொண்டு வந்துள்ளார்.

 நாய்கள் காயம் அல்லது நோய் காரணமாக கைவிடப்படலாம். ஆனால் சட்டவிரோத உறவு வைத்துக் கொண்டதாக கைவிடப்படுவது இதுவே முதல் முறை

.