This Article is From Aug 20, 2018

வெள்ள பாதிப்பில் இரவு பகலாக உதவிய மருத்துவ தம்பதியர்!

கேரள மாநிலத்தில் கடந்த 15 நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்

Aluva, Kerala:

கேரளா: கேரள மாநிலத்தில் கடந்த 15 நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது

நாடெங்கிலும் பல பகுதிகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. கேரளா வெள்ளத்திற்கு, அலுவா மாவட்டம் மிகவும் பாதிப்படைந்துள்ளது.

3,000க்கும் மேற்பட்ட மக்கள் அலுவா பகுதியில் உள்ள வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி மிக முக்கியமாக தேவைப்படுகிறது

இந்நிலையில், அலுவா மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் நஜீப், நஸீமா நஜீப் ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு பகலாக மருத்துவ உதவி வழங்கியுள்ளனர். தொடர்ந்து 2 நாட்களாக, தூக்கமின்றி பணியாற்றிய மருத்துவ தம்பதியர், ஆயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவ உதவி வழங்கியுள்ளனர். "வெள்ள பாதிப்பால் நோய் பரவுவதை தடுப்பதே எங்களின் முதல் குறிக்கோளாக இருந்தது. அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வசதி இல்லாததால், இங்கேயே மருத்துவம் பார்த்தோம்" என்றார் மருத்துவர் நஜீப்

கேரளாவை தாக்கிய மிக கனமழை குறைந்த நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன.
 

.