This Article is From Aug 10, 2019

காஷ்மீர் ஆட்டுச் சந்தையில் விலை விசாரிக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்! வைரலாகும் வீடியோ!!

பக்ரீத் பண்டிகை வருவதையொட்டி காஷ்மீரில் ஆடு விற்பனை சூடு பிடித்துள்ளது. அதன் விலை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விசாரிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

காஷ்மீர் ஆட்டுச் சந்தையில் விலை விசாரிக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்! வைரலாகும் வீடியோ!!

காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதில் அஜித் தோவல் முக்கிய பங்கு வகித்தார்.

Anantnag:

காஷ்மீர் ஆட்டுச் சந்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆட்டின் விலையை கேட்டறியும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அவர் யார் என்று தெரியாமல் அவரிடம் ஆட்டு வியாபாரி சில கேள்விகளை கேட்கிறார். இந்த காட்சிகள் பார்ப்பதற்கு சுவாரசியமாக உள்ளன. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த அதிரடியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கிய பங்கு வகித்தார். 

தற்போது அவர் காஷ்மீரில் முகாமிட்டு அங்குள்ள நிலைமையை கண்காணித்து வருகிறார். இதற்கிடையே பக்ரீத் பண்டிகை வருவதையொட்டி, காஷ்மீரில் ஆடு வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் ஆட்டுச் சந்தை ஒன்றுக்கு சென்ற தோவல் அங்கு விலை விவரத்தை கேட்டறிகிறார்.  
 

ஆட்டின் விலை மற்றும் எடையை அஜித் தோவல் கேட்க அதற்கு ரூ. 10 ஆயிரம், 35 கிலோ எடை வரை ஆடு இருக்கும் என்று வியாபாரி பதில் அளிக்கிறார். தோவல் யார் என்றே அறியாமல் பேசிய வியாபாரி இந்த ஆடுகள் லடாக்கின் கார்கில் பகுதியில் வருகின்றன. அது எங்கு இருக்கிறது என்று தெரியுமா என்று வியாபாரி கேள்வி கேட்டார். 

தோவல் பதில் அளிப்பதற்கு முன்பாக அங்கிருந்த அதிகாரி ஒருவர் வியாபாரியிடம் சென்று, இவர்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவர். காஷ்மீர் விவகாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவர் என்று கூறினார். இதன்பின்னர் வியாபாரியின் கையை குலுக்கி, தோளில் தட்டிக் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார் தோவல். 

.