This Article is From Feb 20, 2019

‘’இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தை குறைக்க வேண்டும்’’ – ஐ.நா. வலியுறுத்தல்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தாக்குதல் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் வேண்டாம் என்கிறது.

‘’இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தை குறைக்க வேண்டும்’’ – ஐ.நா. வலியுறுத்தல்

காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையை சர்வதேச நாடுகள் கவனித்து வருகின்றன.

ஹைலைட்ஸ்

  • பதற்றத்தை குறைக்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்
  • இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது: ஐ.நா.
  • ஐ.நா. பொது செயலாளர் பேட்டி குறித்து செய்தி தொடர்பாளர் விளக்கம்
United Nations:

காஷ்மீர் புல்வாமா தாக்குதல் மூலம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை தணிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

காஷ்மீரில் 40 துணை ராணுவத்தினர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படுகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உதவியுடன் புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இந்தியா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதனை மறுத்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆதாரம் இருந்தால் தாருங்கள் என்று கேட்டுள்ளார்.

இன்னொரு கேள்விக்கு பதில் அளித்திருந்த அவர், இந்தியா தாக்கினால் பதிலடி நிச்சம் என்றும் கூறியிருந்தார். இதனால் இரு நாடுகளுக்கிடையே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படலாம் என தகவல்கள் பரவின.

மேலும் படிக்க : ‘இந்தியா தாக்கினால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்!'- இம்ரான் கான் எச்சரிக்கை

இருநாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டிருப்பது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரெஸ் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஐ.நா. சபையின் தலைமை செய்தி தொடர்பாளர் ஸ்டீவன் டுஜாரிக் அளித்த பேட்டி-

இரு நாடுகளும் பதற்றத்தை தணிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக ஐ.நா. எந்த நேரமும் உதவி செய்ய தயாராக உள்ளது. இந்தியாவுடனான பதற்றத்தை தணிக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி கேட்டுக் கொண்டுள்ளார்.

காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க : காஷ்மீர் தாக்குதல்: சவூதி மூலமாகவும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க இந்தியா திட்டம்

.