தப்புமா கர்நாடக கூட்டணி அரசு; மும்பையில் ‘தலைமறைவாக’ உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்- 10 ஃபேக்ட்ஸ்!

மஜத, மேலும் எம்.எல்.ஏ-க்கள் விலகாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில், பெங்களூருவுக்கு வெளியே உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்களது சட்டமன்ற உறுப்பினர்களை தங்கவைத்துள்ளது. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
தப்புமா கர்நாடக கூட்டணி அரசு; மும்பையில் ‘தலைமறைவாக’ உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்- 10 ஃபேக்ட்ஸ்!

காங்கிரஸின் மூத்த நிர்வாகி டி.கே.சிவக்குமார், “இந்த அனைத்து அரசியல் குழப்பங்களுக்கு எடியூரப்பாதான் காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார்


Bengaluru/Mumbai: 

கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அரசில் இருந்த 13 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால், அந்த அரசு, கவிழ வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கர்நாடக சட்டசபையின் சபாநாயகர் ரமேஷ் குமார், 13 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா குறித்து இன்று முடிவெடுக்க உள்ளார். கூட்டணி அரசில் அமைச்சர் பதவி வகிக்கும் அனைவரும், தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதன் மூலம் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தங்களது முகாமுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர். கட்டணி அரசு, இந்த ராஜினாமா குறித்து சட்ட நடைமுறைகளையும் ஆராய உள்ளதாக தகவல் வந்துள்ளனது. 

10 ஃபேக்ட்ஸ்:

1.கர்நாடக சட்டசபை சபாநாயகர், தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களிடம், தனிப்பட்ட முறையில் கருத்து கேட்க உள்ளார். எம்.எல்.ஏ-க்கள் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் தானாக முன்வந்து பதவியைத் துறக்கின்றனரா என்பதை உறுதி செய்ய இந்த நடைமுறை.

2.கர்நாடகத்தில் மொத்தமாக 224 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்குத் தற்போது 118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு உள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில், கூட்டணி அரசின் பலம் 103 ஆக குறையும். மெஜாரிட்டியை நிரூபிக்க 105 பேர் இருந்தால் போதும் என்ற நிலை உருவாகும். தற்போது பாஜக-வின் பலம் 105 ஆக உள்ளது. அவர்களுக்கு 2 சுயேட்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும் உள்ளது. 

3.காங்கிரஸ் மற்றும் மஜத-விலிருந்து விலகிய அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் முன்னதாக ஒரு சொகுசு விடுதியில் இருந்தனர். கட்சி நிர்வாகிகள் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மும்பையில் ‘தலைமறைவாக' உள்ளனர். 

4.மஜத, மேலும் எம்.எல்.ஏ-க்கள் விலகாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில், பெங்களூருவுக்கு வெளியே உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்களது சட்டமன்ற உறுப்பினர்களை தங்கவைத்துள்ளது. 

5.இதுவரை 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். முன்னதாக காங்கிரஸின் ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ, கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்தார். அவரும் விரைவில் பாஜக-வில் இணைவார் என்று தெரிவிக்கப்படுகிறது. 

6.அமெரிக்காவுக்கு சென்றிருந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, அரசியல் குழப்பத்தை அடுத்து கர்நாடகா திரும்பியுள்ளார். “இந்த அரசாங்கம் கவிழாது” என்று அவர் உறுதியளித்துள்ளார். 

7.மாநிலத்தில் வெற்றி பெற்ற 2 சுயேட்சை எம்.எல்.ஏ-க்களுக்கு சென்ற மாதம் அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டது. அவர்களும் தற்போது தங்களது பதவியை ராஜினாமா செய்து, அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுடன் இணைந்துள்ளனர். 

8.காங்கிரஸின் மூத்த நிர்வாகி டி.கே.சிவக்குமார், “இந்த அனைத்து அரசியல் குழப்பங்களுக்கு எடியூரப்பாதான் காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார். 

9.சென்ற ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாஜக கூறியுள்ளது. 

10.காங்கிரஸ், கர்நாடக அரசியல் குழப்பம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளது. “எங்கெல்லாம் பாஜக, ஆட்சியமைக்கவில்லையோ அங்கெல்லாம் அரசியல் குழப்பத்தை விளைவித்து வருகிறது” என்று குற்றம் சாட்டியது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................