கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி!

இதேபோல், அமித் ஷா விரைவில் குணமடையுவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் குணமடைந்து, முழு உற்சாகத்துடன் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி! (File)

Bengaluru:

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார். 

இதுதொடர்பாக நேற்றிரவு முதல்வர் எடியூரப்பா தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, தான் நலமுடன் இருப்பதாகவும், எனினும் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

தொடர்ந்து, முதல்வரின் செய்திதொடர்பு குழு கூறும்போது, மானிப்பால் மருத்துவமனையில் எடியூரப்பாவை அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், முதல்வருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

இதுகுறித்த முதல்வர் எடியூரப்பாவின் ட்விட்டர் பதிவில், பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அண்மையில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த மாதம் முதல்வர் அலுவலத்தை சேர்ந்த ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த சமயத்தில் முதல்வர் எடியூரப்பா, அலுவலகம் மற்றும் வீட்டில் உள்ள ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதால், அடுத்த சில நாட்களுக்கு நான் வீட்டிலிருந்து எனது கடமையைச் செய்யபோகிறேன் என்று தெரிவித்திருந்தார். 

ஆளுநர் வாஜூபாய் வாலாவை கடந்த வெள்ளிக்கிழமையன்று முதல்வர் எடியூரப்பா நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, உள்துறை அமைச்சர் பாசவராஜ் பொம்மையும் உடனிருந்தார். 

ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அதைத்தொடர்ந்து, தற்போது கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் அமித்ஷாவுடன் மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்ட அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

எனினும், இந்த சந்திப்பின்போது, சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த மாதம் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அப்போது, முதல் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து, அவர் முதல்வர் எடியூரப்பா விரைவில் குணமைடையவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதேபோல், அமித் ஷா விரைவில் குணமடையுவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் குணமடைந்து, முழு உற்சாகத்துடன் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


I wish Shri. B S Yediyurappa a speedy recovery & to return with good health to continue his work for the people.@CMofKarnataka@BSYBJPhttps://t.co/1Z8yM5WonZ


இதேபோல், முன்னாள் கர்நாடகா முதல்வர் சித்தாராமையாவும், எடியூரப்பா விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை காவிரி மருத்துவமைனையில அனுமதிக்கப்பட்டார். அவர் அறிகுறிகள் இல்லை என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 54,735 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிகையானது 17,50,723 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.