This Article is From Nov 24, 2018

தீவிரவாத தாக்குதலிருந்து சீன தூதரகத்தை காப்பாற்றிய பெண் காவல்துறை அதிகாரி இவர்தான்

ஒன்பது கையெறி குண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் பலவற்றை கொண்ட பயங்கரவாதிகளை தூதரகத்தில் நுழைய விடாமல் தடுத்ததில் சுஹாயின் பங்கு முக்கியமானது.

தீவிரவாத தாக்குதலிருந்து சீன தூதரகத்தை காப்பாற்றிய பெண் காவல்துறை அதிகாரி இவர்தான்
Karachi:

கராச்சி நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து உறவினர்களால் கைவிடப்பட்டு ஒரு பெண் இன்று சீன தூதரகத்தில் உள்ள பல அதிகாரிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

காரச்சியில் உள்ள மூத்த காவல்துறை அதிகாரியாக உள்ள சுஹாய் அஸிஸ் தல்பூர் என்னும் பெண், பலூச் லிபரேஷன் ஆர்மி நடத்திய  வெடிகுண்டு தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையை வழிநடத்தினார்.

ஒன்பது கையெறி குண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் பலவற்றை கொண்ட பயங்கரவாதிகளை தூதரகத்தில் நுழைய விடாமல் தடுத்ததில் சுஹாயின் பங்கு முக்கியமானது.

தீவிரவாதிகள் மருத்து மற்றும் உணவுகளை கொண்டு வரும் வாகனத்தில் பணய கைதிகளை கொண்டு செல்ல வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனால் அவர்கள் தூதரகத்தின் நுழைவாயிலை அடைந்தவுடன் காவல்துறையினர் தாக்கத் தொடங்கினார்கள். நடந்த துப்பாக்கி சூட்டில் காவல்துறையில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 

உயரதிகாரிகள் பலரையும் காப்பாற்றிய சுஹாய் சிந்து மாகாணத்தின் டாண்டோ முஹம்மது கான் மாவட்டத்தில் உள்ள  பாய் கான் தல்பூர் கிராமத்தின  நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 

2013-ல் சென்ட்ரல் சுப்பீரியர் சர்வீஸ் (Central Superior Services exam) தேர்வில் தேர்ச்சி  பெற்று காவல் துறையில் பணியாற்றத் தொடங்கினார். தி எக்ஸ்பிரஸ் ட்ரீபுயூன் பத்திரிகை கொடுத்த தகவலின் படி

தனது பெற்றோர்கள் தன்னை பள்ளியில் சேர்க்க தீர்மானித்த போது சுஹாய் குடும்ப உறவினர்கள் அவர்கள் குடும்பத்தை தொல்லை செய்யத் தொடங்கினார்கள். அதனால் தன் கிராமத்தை விட்டு வெளியேறி நகரத்திற்கு செல்ல வேண்டியதானது என்று இளமைக் காலத்தை பற்றி பகிர்ந்து கொண்டார்.

 ஒரு அரசியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளராக உள்ள சுஹாயின் தந்தை அஸிஸ் தல்பூர் பேசியபோது, “ எனது உறவினர்கள் என்னை புறக்கணித்து என்னுடனான உறவை முறித்துக் கொண்டார்கள். அவர்கள் மத கல்வியை மட்டுமே சுஹாய் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் நான் என் மகளுக்கு தரமான பொதுக் கல்வியை மட்டுமே கொடுக்க நினைத்தேன்” என்று கூறினார்.

சுஹாய் தன் ஆரம்பக் கல்வியை தனியார் பள்ளியிலும் இடைநிலைக் கல்வியை பஹரிய அறக்கட்டளையின் மூலமாகவும் படித்தார். ஹைதராபாத்தில் உள்ள  சுபைதா பெண்கள் கல்லூரியில் பி.காம் பட்டத்தை பெற்றார்.

“என் குடும்பம் என்னை சி.ஏ படிக்க வேண்டுமென்றே விரும்பியது. ஆனால் நான் சமூக அக்கறையில்லாத மந்தமான வேலைகளைச் செய்ய விரும்பவில்லை. அதனால் சிஎஸ்எஸ் தேர்வை முதல் முயற்சியிலே வெற்றி பெற்றதாக” கூறினார். 

கடின உழைப்பாலும் முறையான வளர்ப்பினால் மட்டுமே இந்த வெற்றியை தனக்கு கிடைத்ததாக கூறுகிறார். “ என் பெற்றோர்கள் தேசியவாதிகள், சிறுவயது முதல்  சிந்தி பாடல்களை மனப்பாடம் செய்ய வலியுறுத்தினார்கள். அதனால்தான் எனக்கு இலக்கியம் மற்றும் வரலாறு பாடங்களில் ஆர்வம் வரத் தொடங்கியதாக கூறினார். அதனால் தான் சிஎஸ்எஸ் தேர்வில் இந்த இரண்டு பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்ததாக " பெருமையுடன் கூறினார்.

.