This Article is From Jul 02, 2018

‘மாற்றத்தை உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பிங்க!’- கமலை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்

நடிகர் மற்றும் அரசியல்வாதி கமல்ஹாசன் ட்விட்டரில் ஒரு விஷயத்துக்காக தொடர்ந்து கடந்த சில நாட்களாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்

‘மாற்றத்தை உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பிங்க!’- கமலை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்

ஹைலைட்ஸ்

  • 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை பிப்ரவரியில் தொடங்கினார் கமல்
  • தொடர்ந்து தீவிர அரசியலிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்
  • சமீபத்தில் அவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார்
Chennai:

நடிகர் மற்றும் அரசியல்வாதி கமல்ஹாசன் ட்விட்டரில் ஒரு விஷயத்துக்காக தொடர்ந்து கடந்த சில நாட்களாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

ட்விட்டரில் அவரிடம் ஒருவர், ‘சாதியை ஒழிக்க என்ன வழி?’ என்று கேட்டுள்ளார். அதற்கு, ‘என் இரு மகள்களின் பள்ளிச் சான்றிதழ்களிலும் சாதி மற்றும் மதம் என்ன என்பதை எழுத நான் மறுத்துவிட்டேன். அது தான் ஒரே வழி. அப்படி செய்வதன் மூலம், நம் செயல் அடுத்தடுத்த தலைமுறைகளை சென்றடையும். ஒவ்வொரு தனி மனிதனும் சமூக முன்னேற்றத்துக்கு வழி வகுக்க வேண்டும். கேரளா இதைத்தான் செய்துள்ளது. மாற்றத்தை முன்னெடுத்து செல்பவர்களை நாம் கொண்டாட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதற்கு இன்னொரு ட்விட்டர் பயனர், ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், ‘நான் ஒரு ஐயங்கார்’ என்று வெளிப்படையாக சொல்லியுள்ளதை எடுத்த பகிர்ந்து, ‘கமல்ஹாசன் சார், நீங்கள் சாதிப் பெயரை பள்ளி சான்றிதழில் போடவில்லை என்றாலும், உங்கள் சாதி ஒழிப்பு நடவடிக்கை வெற்றி பெறவில்லை. உங்கள் வீட்டிலிருந்து மாற்றத்தைத் தொடங்குகள் சார். சாதிப் பெயரை போடாததால் சாதி ஒழிந்துவிடாது. குழந்தைகளுக்கு அவர்களின் சாதி என்ன என்பதை தெரியாத வகையில் வளர்க்க வேண்டும்’ என்று விமர்சனம் செய்தார்.

மேலும் பல நெட்டிசன்கள் கமலின், ‘சாதி ஒழிப்பு யோசனை’-க்கு எதிர்ப்பு தெரிவித்து மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர். 

.