This Article is From Jul 12, 2019

7 வாரம் கடந்து விட்டது… காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்? ஜோதிராதித்யா சிந்தியா ஆதங்கம்

ராகுல் காந்தி பதவி விலகுவார் என்று நாங்கள் இதுவரை எண்ணவில்லை. அவர் பதவியில் தொடர வைக்க வேண்டும் என்பதில்  உறுதியாக இருந்தோம். ஆனால் அவர் தனது  முடிவில் உறுதியாக இருக்கிறார். எனவே கட்சிக்கு உடனடியாக தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்கனவே 6 வாரகாலம் ஆகிவிட்ட நிலையில் உடனடியாக காரியக் கமிட்டி முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சி தற்போது இக்கட்டான சூழலில் உள்ளது. (File)

ஹைலைட்ஸ்

  • ராகுல் காந்தி பதவி விலகுவார் என்பதை எண்ணியும் பார்க்கவில்லை
  • ராகுல் காந்தி பதவி விலகி 7 வாரங்கள் ஆகிவிட்டது.
  • என் பேச்சு காங்கிரஸ் தலைமைக்கான போட்டியாக கருத வேண்டாம்
Bhopal:

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகி 7 வாரங்கள் கடந்து விட்ட நிலையில், காங்கிரஸ் காரியக் கமிட்டி உனடியாக கூடி அடுத்த தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா வலியுறுத்தியுள்ளார். 

2017 ஆம் ஆண்டு சோனியா காந்திக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸினால் 52 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி கடந்த மாதஹ்ம் 25-ம் தேதி நடந்த செயற்குழுகூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 

இதை செயற்குழு உறுப்பினர்கள் ஏற்கவில்லை. ஆனால் ராகுல் காந்தி தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற அடையாளத்தை நீக்கி முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். 

c7pvboeg

ராகுல் காந்தியின் முடிவை ஆதாரித்து மும்பை காங்கிரஸ் தலைவர் பதவியில் மிலிந்த் தியோரா விலகினார். காங்கிரஸ் பொது செயலாளர் பொறுப்பிளிருந்து ஜோதிராதித்யா சிந்தியாவும் பதவி விலகினார்.

இந்நிலையில்  ராகுல் காந்தி பதவி விலகுவார் என்று நாங்கள் இதுவரை எண்ணவில்லை. அவர் பதவியில் தொடர வைக்க வேண்டும் என்பதில்  உறுதியாக இருந்தோம். ஆனால் அவர் தனது  முடிவில் உறுதியாக இருக்கிறார். எனவே கட்சிக்கு உடனடியாக தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்கனவே 6 வாரகாலம் ஆகிவிட்ட நிலையில் உடனடியாக காரியக் கமிட்டி முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

.