டெல்லியில் பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கி சூடு

பத்திரிகையாளர் மிதாலி சந்தோலா காருக்குள் இருந்தபோதுசில முகமூடி அணிந்தவர்கள் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
டெல்லியில் பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கி சூடு

பத்திரிக்கையாளர் தர்மசீலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


New Delhi: 

டெல்லியில் பெண் பத்திரிகையாளர் ஒருவரை முகமூடி அணிந்த குழுவினர் துப்பாக்கியால் சுட்டனர். நொய்டா பகுதியில் வசித்து வந்தவர் ஹீண்டாய் காரை ஓட்டி வந்துகொண்டிருந்த போது இரவு 12.30 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது. 

பத்திரிகையாளர் மிதாலி சந்தோலா காருக்குள் இருந்தபோதுசில முகமூடி அணிந்தவர்கள்  இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். காரின் கண்ணாடியில் முட்டையையும் வீசியுள்ளனர்.  இரவில் வாகன ஓட்டிகளை திசை திருப்பி கொள்ளையடிக்கும் கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதா என்று விசாரணை நடத்தி வருகிறது. பத்திரிக்கையாளர் தர்மசீலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார்.
 

j3msqt8g

தோள்பட்டையில் துப்பாக்கி குண்டு தாக்கியுள்ளது. பத்திரிகையாளர் மிதாலிக்கு தன் குடும்பத்தினருடன் சுமூகமான உறவில் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி சூடு குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

2008 ஆம் ஆண்டில் 26-வயது செளமியா விஸ்வநாதன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................