This Article is From Jun 14, 2019

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 5 போலீசார் உயிரிழப்பு

தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் போலீசாரின் ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் மேற்கு வங்கம் - ஜார்க்கண்ட் எல்லையில் நடந்துள்ளது.

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 5 போலீசார் உயிரிழப்பு

மாவோயிஸ்டுகள் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Jamshedpur:

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் போலீசார் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் போலீசாரின் ஆயுதங்களை எடுத்துச் சென்றுள்ளனர். மேற்கு வங்கம் - ஜார்க்கண்ட் எல்லையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 

ஜார்க்கண்டின் ஜாம்ஷெத்பூர் அருகே சராய்கேலா மாவட்டம் உள்ளது. இங்கு இன்று மாலை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த 2 மாவோயிஸ்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

இந்த சம்பவத்தில் இரண்டு உதவி ஆய்வாளர்கள், 3 கான்ஸ்டபிள்கள் ஆகியோர் உயிரிழந்தனர். இதன் பின்னர் போலீசாரின் ஆயுதங்களை மாவோயிஸ்டுகள் எடுத்து சென்றனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட எஸ்.பி. சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார். ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் மாவோயிஸ்டுகளின் தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். 

கொடூர தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும், மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் இருப்பு எண்ணப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் முதல்வர் எச்சரித்துள்ளார். 

இதே சராய்கலா மாவட்டத்தில் கடந்த மே 28-ம்தேதி மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 8 பாதுகாப்பு படையினருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களில் சிஆர்பிஎப் கமாண்டோ ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

.