சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை!

இதுவரை, ஏழு மாவோயிஸ்ட்களின் சடலங்களும், ஒரு ஏ.கே.-47 உட்பட ஒரு பெரிய வெடிகுண்டும் சம்பவ இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, என்று துணை ஆய்வாளர் (மாவோயிச எதிர்ப்பு நடவடிக்கைகள்) சுந்தர்ராஜ் கூறினார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை!

மாவோயிச எதிர்ப்பு நடவடிக்கையில் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Raipur: 

சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.-47 ரக துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக நக்ஸல் ஒழிப்பு போலீஸ் அதிகாரி சுந்தரராஜ் கூறுகையில், பாக்நதி காவல்நிலையத்துக்கு உட்பட்ட சீதாகோட்டா கிராமத்தின் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் மாவட்ட பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு இன்று அதிகாலை 6 மணி முதல் மவோயிஸ்ட்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், அவர்கள் வசம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி உட்பட வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவித்தார். 

மேலும், தேடல் நடவடிக்கைகள் இன்னும் நடைபெற்று வருவதால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என தெரிகிறது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................