This Article is From Dec 03, 2018

ஜெயலலிதா மரணம் தொடர்பாக டாக்டர் சிவகுமாரிடம் 4 மணி நேரம் விசாரணை

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் 4-வது முறையாக அவரது தனி மருத்துவர் சிவகுமார் இன்று ஆஜரானார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக டாக்டர் சிவகுமாரிடம் 4 மணி நேரம் விசாரணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அவரது தனி மருத்துவர் சிவகுமாரிடம் ஆறுமுகச்சாமி ஆணையம் 4 மணிநேரமாக இன்று விசாரணை நடத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ம்தேதி காலாமானர். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்து, அதுபற்றி விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டது.

அந்த கமிஷனில் ஜெயலலிதாவுடன் தொடர்புடையவர்கள் பலரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினரும், ஜெயலலிதாவின் தனி மருத்துவருமான சிவகுமார் விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜர் ஆனார்.

அவரிடம் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடத்தப்பட்டது. மதியம் 2.30-க்கு ஆஜரான அவரிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே 3 முறை டாக்டர் சிவகுமார் ஆறுமுக சாமி கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்திருக்கிறார். ஜெயலிதா மரணம் அடைவதற்கு முன்பு அவருக்கு சிகிச்சை அளித்தவர் சிவகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

.