This Article is From Sep 18, 2019

தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பிய பாகிஸ்தான்; சுட்டுக் கொன்ற இந்திய ராணுவம்!!

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டது பாகிஸ்தானுக்கு அச்சத்தையும், விரக்தியையும் அளித்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை தூண்டி விடும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது.

தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பிய பாகிஸ்தான்; சுட்டுக் கொன்ற இந்திய ராணுவம்!!

தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

New Delhi:

தீவிரவாதிகளை நாச வேலைகளில் ஈடுபட வைப்பதற்காக இந்தியாவுக்குள் அவர்களை பாகிஸ்தான்  ராணுவம் ஊடுருவச் செய்தது. அவர்களை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளனர். தீவிரவாதிகள் ஊடுருவும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

ஜம்மு காஷ்மீரில் இருந்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அசம்பாவிதங்களை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் பலத்த துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
 

இதேபோன்று பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகள் இந்தியாவுக்கு சொந்தம் என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மத்திய அரசு மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கையால் விரக்தியடைந்துள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்து நாச வேலைகளை செய்யத் தூண்டுகிறது. 

அந்த வகையில் குரேஸ், மச்சால், கெரான், தந்கார், உரி, பூஞ்ச், நவ்ஷெரா, சுந்தர்பானி, ஆர்.எஸ்.புரா, ராம்கர், கத்துவா உள்ளிட்ட எல்லைப் பகுதியில் சுமார் 250 க்கும் அதிகமான தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் புகுத்துவதற்கு பாகிஸ்தான் ராணுவம் முயற்சி மேற்கொண்டுள்ளது. 

இந்த நிலையில் எல்லையின் வழியே தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டது. கடந்த 12-ம்தேதி நள்ளிரவில் ஹாஜிப்பூர் செக்டாரில் இந்த சம்பவம் நடந்தது. இந்தப் பகுதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கிறது. 

இந்த நிலையில் எல்லைக்குள் புக முயன்ற தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

.