ஜாமியா பல்கலை. துப்பாக்கிச்சூடு : குற்றவாளியை அடையாளம் கண்டது காவல்துறை!!

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பாக ராம்பக்த் கோபால் சர்மா, தனது துப்பாக்கியை கருப்பு நிற ஜாக்கெட்டிற்குள் மறைத்து வைத்திருக்கிறார். போராட்டத்தில் சிறிது நேரம் பங்கேற்று விட்டு துப்பாக்கிச்சூட்டை அவர் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாமியா பல்கலை. துப்பாக்கிச்சூடு : குற்றவாளியை அடையாளம் கண்டது காவல்துறை!!

மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஆவேசத்துடன் கத்திச் செல்லும் ராம்பக்த்

New Delhi:

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக போராடி வரும் மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது பெயர் ராம்பக்த் கோபால் சர்மா என்பதும், அவருக்கு வயது 19 என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. 

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பாக ராம்பக்த் கோபால் சர்மா, தனது துப்பாக்கியை கருப்பு நிற ஜாக்கெட்டிற்குள் மறைத்து வைத்திருக்கிறார். போராட்டத்தில் சிறிது நேரம் பங்கேற்று விட்டு துப்பாக்கிச்சூட்டை அவர் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சம்பவத்திற்கு முன்பாக அவர் பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்திருக்கிறார். 

போராட்டத்தில் சிறிது நேரம் பங்கேற்று விட்டு பின்னர், துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினார். இதில்  ஜாமியா பல்கலைக் கழகத்தின் மக்கள் தொடர்பியல் மாணவர் சதாப் பரூக் காயம் அடைந்திருக்கிறார். 

பின்னர், கூட்டதை நோக்கி துப்பாக்கியை காண்பித்து மிரட்டியவாறு, ராம்பக்த் கத்திக் கொண்டே சென்றார். இதையடுத்து போலீசார் அவரை சுற்றி வழைத்து கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களை நோக்கி தனது பெயர் 'ராம்பக்த் கோபால்' என்று அவர் கத்தியுள்ளார். 

கோபாலின் பேஸ்புக் பக்கத்தில் 'ஷஹீன் பாக் கேம் ஓவர்', 'அங்கிருப்பவர்களில் நான் மட்டுமே இந்து' என்பதுபோன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 

சில பிரியா விடை சம்பந்தமான வாசகங்களும் கோபாலின் பேஸ்புக் பக்கத்தில் உள்ளன. 'எனது கடைசி பயணத்தில், என்னை காவி நிற ஆடையில் போர்த்தி, ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை முழங்கி என்னை கொண்டு செல்லுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். 

காவல்துறை நடத்திய விசாரணையில் ராம்பக்த் கோபால் உத்தரப்பிரதேச மாநிலம் ஜெவாரை சேர்ந்தவர் என்பதும், அவரது தந்தை புகையிலை கடை நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது. 

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் குறிப்பாக கல்லூரி, பல்கலைக் கழக வளாகங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.