This Article is From Jan 11, 2019

‘2021 டிசம்பரில் விண்ணுக்கு இந்தியர்களை அனுப்ப டார்கெட்..!’- இஸ்ரோ உற்சாகம்

2018 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டு நாட்டின் 72வது சுதந்திர தினத்தன்று காகன்யான் திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக கூறினார். 

‘2021 டிசம்பரில் விண்ணுக்கு இந்தியர்களை அனுப்ப டார்கெட்..!’- இஸ்ரோ உற்சாகம்

இந்தத் திட்டத்துக்காக மத்திய அமைச்சரவை, 10,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 

Bengaluru:

ISRO: 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிலிருந்து விண்ணுக்கு விண்வெளி வீரர்கள் அனுப்ப இலக்கு வைத்துள்ளோம் என்று இஸ்ரோ நிறுவனத் தலைவர் கே.சிவன் தகவல் தெரிவித்துள்ளார். 

காகன்யான் என்கிற இந்தியாவின் புதிய திட்டம் மூலம் விண்ணுக்கு இந்தியர்களை அனுப்ப இஸ்ரோ முயற்சி எடுத்துள்ளது. அப்படிச் செய்வதன் மூலம் விண்ணுக்கு மனிதர்களை அனுப்பிய உலகின் 4வது நாடாக இந்திய உருவெடுக்கும். 2018 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டு நாட்டின் 72வது சுதந்திர தினத்தன்று காகன்யான் திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக கூறினார். 

கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ‘2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 3 விண்வெளி வீரர்களை, விண்ணுக்கு அனுப்ப உள்ளோம்' என்று கூறினார். இந்தத் திட்டத்துக்காக மத்திய அமைச்சரவை, 10,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 

இந்தத் திட்டம் குறித்து NDTV-யிடம் இஸ்ரோ தலைவர் சிவன் பேசுகையில், "காகன்யான் திட்டத்துக்கான ஆரம்பகட்டப் பயிற்சி இந்தியாவில்தான் நடக்கும். அதன் அடுத்தப் பயிற்சி ரஷ்யாவில் நடைபெற வாய்ப்புள்ளது. விண்வெளி வீராங்கணைகளும் இந்தத் திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் சேரும்படி இருக்கும்" என்று கூறியுள்ளார்.

.