This Article is From Jul 15, 2019

தொழில்நுட்ப கோளாறு : தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியாவின் கனவுத் திட்டம்!!

இன்று அதிகாலை 2.51-க்கு பாகுபலி ராக்கெட் மூலமாக சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட இருந்தது.

ஏவுகணை ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் இருக்கும்போது தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Sriharikota:

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவின் கனவுத் திட்டம் என்றழைக்கப்படும் சந்திரயான் 2 – தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்டுத்தியிருந்த இந்த திட்டம், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பாகுபலி ராக்கெட் என்றழைக்கப்படும் மார்க் 3- மூலம் சந்திரயான்2- இன்று அதிகாலை 2.51-க்கு நிலவுக்கு செலுத்தப்பட இருந்தது. அதற்கு சுமார் 56 நிமிடங்களுக்கு முன்பாக தொழில்நுட்ப கோளாறு இருந்ததை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். இதையடுத்து தற்காலிகமாக சந்திரயான் 2 திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விண்ணில் செலுத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

சந்திரயான் 2- திட்டம் தொடர்பான 10 முக்கிய தகவல்கள்

  1. உலக நாடுகளிலேயே முதல்முறையாக நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராயும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது. இதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை இந்தியா உருவாக்கி வந்தது.
  2. இறுதிகட்ட பணிகள் முடிந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலதை விண்ணில் ஏவ இந்தியா தயாராகி இருந்து.
  3. இன்று அதிகாலை 2.51 மணியளவில் 3.8டன் எடைகளுடன் சந்திராயன்-2 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட இருந்தது. 
  4. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.
  5. நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக ‘ஆர்பிட்டர்' என்ற சாதனம், நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்ய ‘லேண்டர்' என்ற சாதனம், நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ‘ரோவர்' என்ற சாதனம் என மொத்தம் 3 சாதனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
  6. இந்த மூன்று சாதனங்களிலும் அதிநவீன கேமராக்கள், எக்ஸ்ரே கருவிகள், வெப்பநிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.
  7. வெற்றிகரமான விண்ணில் ஏவப்பட்ட உடன், இரண்டு மாத பயணங்களுக்கும் பின் சந்திராயன் -2 நிலவின் தென் துருவப் பகுதியை அடையும்.
  8. 3.84 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து நிலவை அடையப்போகிறது சந்திராயன் 2. இந்த சந்திராயன் 2 திட்டத்தை செயல்படுத்த 1000 கோடி ரூபாயை இந்தியா செலவழித்துள்ளது. இதுவரை எந்த விண்கலமும் கால் பதிக்காத இடத்தை சந்திராயன் - 2 தனது தடத்தை பதிக்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
  9. இஸ்ரோவின் தலைவரான் கே.சிவன் கடைசி 15 நிமிடங்கள் மிகவும் பதட்டமான நேரமாக இருக்கும் இதற்கும் முன் சிக்கலான தொழில்நுட்பம் கொண்ட விண்கலம் ஏவப்படவில்லை என்று கூறியிருந்தார்.
  10. இந்த விண்கலம்  வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டால் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவைவிட கிட்டத்தட்ட 20 மடங்கு குறைவாக பட்ஜெட்டைக் கொண்டுள்ளது.

.