இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம்!!

வேலையில்லா பிரச்னை குறித்த தகவல் முதன்முறையாக கடந்த ஜனவரியில் வெளியானது. பிஸ்னஸ் ஸ்டேண்டர்டு செய்தித்தாள் வெளியிட்ட தகவலை மத்திய அரசு தற்போது உறுதி செய்திருக்கிறது.

இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம்!!

கடந்த 1972-13-க்கு பின்னர் ஏற்பட்டிருக்கும் பெரிய அளவிலான வேலையின்மை இதுவாகும்.

New Delhi:

2017-18-ல் நாட்டின் வேலையில்லாத பிரச்னையின் அளவு 6.1 சதவீதமாக உள்ளது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். முன்னதாக இந்த தகவலை பிஸ்னஸ் ஸ்டேண்டர்டு செய்தித்தாள் கடந்த ஜனவரியில் வெளியிட்டது. 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற நிலையில் ஜனவரியில் வெளியான இந்த தகவலை மத்திய அரசு தற்போது உறுதி செய்துள்ளது. இருப்பினும் முன்னர் வெளியான புள்ளி விவரங்களை மறுத்திருக்கும் தலைமை புள்ளியியல் அதிகாரி பிரவீன் ஸ்ரீவஸ்தவா, இந்த தகவல்கள் புதிய அளவுகோல்படி எடுக்கப்பட்டவை என்றும், முன்னர் வெளியான தகவலுடன் இதனை ஒப்பிடுவது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார். 

முன்னதாக பிஸ்னஸ் ஸ்டேண்டர்ட் செய்தித்தாளில் கடந்த ஜனவரியன்று வேலை வாய்ப்பின்மை குறித்த தகவல்கள் வெளியனாது. ஆனால் அந்த தகவல் அதிகாரப்பூர்வமானதாக இல்லை. இதன்பின்னர் மத்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டிருந்தன. இந்த நிலையில் தற்போது புதிய தகவலை அரசு வெளியிட்டுள்ளது. 

இதற்கு முன்பாக கடந்த 1972-73-ல்தான் வேலையின்மை பிரச்னை அதிகளவில் இருந்தது. மக்களவை தேர்தலின்போது வேலையின்மை பிரச்னை குறித்து பிஸ்னஸ் ஸ்டேண்டர்ட் வெளியிட்ட தகவல்களை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி பிரசாரம் மேற்கொண்டது. 

இருப்பினும் தேர்தல் நடத்தப்பட்ட 542 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்கள் மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

More News