This Article is From Jan 04, 2019

ஆப்கன் நூலக விவகாரத்தில் மோடியை கிண்டல் செய்த ட்ரம்புக்கு மத்திய அரசு பதில்

பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வெளிநாடுகளின் மேம்பாட்டுக்கு அளிக்கப்படும் நிதியை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆப்கன் நூலக விவகாரத்தில் மோடியை கிண்டல் செய்த ட்ரம்புக்கு மத்திய அரசு பதில்

ஆப்கனில் நூலகம் கட்ட வேண்டும் என்று மோடி தொடர்ந்து வலியுறுத்தியதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

New Delhi:

ஆப்கன் நூலக விவகாரத்தில் மோடியை கிண்டல் செய்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. டொனால்டு ட்ரம்பை முன்பு சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தானை புதுப்பிப்பது தொடர்பாக பேசியுள்ளார்.

அப்போது, அங்கு பிரமாண்ட நூலகம் அமைக்க வேண்டும் என்று ட்ரம்பிடம் மோடி பலமுறை வலியுறுத்தியிருக்கிறார். இதனை பத்திரிகையாளர் சந்திப்பின்போது சுட்டிக் காட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மோடி என்னிடம் ஆப்கனில் நூலகம் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 
நல்ல விஷயம்தான். ஆனால் யார் வந்து அந்த நூலகத்தை பயன்படுத்தப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

தேவையில்லாத விஷயத்தை மோடி பேசுகிறார் என்ற குறிப்பிடுவது போல ட்ரம்புடைய பேச்சு இருந்தது. இந்த நிலையில், ட்ரம்பின் கிண்டலுக்கு மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனில் நூலகம் அமைக்க இந்தியா முனைப்பு காட்டுவது குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், ''போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் புனரமைப்பு பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் ஆப்கன் மக்களின் வாழ்க்கையை மாற்ற முடியும் என்று இந்தியா நம்புகிறது.

ஆப்கன் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே ஆப்கனுக்கு உதவி செய்வது, அந்நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவது, ஆப்கன் அரசுடன் இணைந்து பணியாற்றுவது உள்ளிட்டவற்றை மத்திய அரசு மேற்கொள்கிறது.'' என்று தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டு படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்த தீவிரவாதிகளை துவம்சம் செய்தது.
இதனால் முற்றிலும் சேதம் அடைந்திருக்கும் ஆப்கானிஸ்தானை புதுப்பிக்க மத்திய அரசு தொடர்ச்சியாக உதவி செய்து வருகிறது. அந்த வகையில் இதுவரைக்கும் சுமார் ரூ. 21 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

காபூலில் உள்ள சர்வதேச தரம் மிக்க பள்ளி, மாணவர்களுக்கான உதவித் தொகை, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்டவை இந்தியாவின் உதவிகளுக்கு சில உதாரணங்கள்.

.