பாலத்தைக் காணோம்… பாலத்தைக் காணோம் - திருடர்களை தேடும் காவல்துறை

உள்ளூர் வாசிகள் பாலம் கீழே விழுந்ததும் திருடர்கள் இரும்பிற்காக அதை திருடி சென்றிருக்கலாம் என்று யூகிக்கிறார்கள்

 Share
EMAIL
PRINT
COMMENTS
பாலத்தைக் காணோம்… பாலத்தைக் காணோம் - திருடர்களை தேடும் காவல்துறை

பாலத்தின் நடுப்பகுதி காணாமல் போனதை பார்க்கலாம்


ரஷ்யாவில் ஆர்க்டிக் பகுதியில் 56டன் எடையுள்ள பாலம் காணாமல் போன சம்பவம் நடந்துள்ளது. காணாமல் போன பாலத்திற்காக குற்றவியல் விசாரணை நடத்தப்படுகிறது. டெய்லி மெய்ல் கொடுத்த செய்தியில் ரஷ்யாவின் முர்ம்மன்ஸ் பகுதியில் அம்பா ஆற்றின் மீது ஒரு பாலம் லம்75 அடி நீளமுள்ள பாலம் ஒன்று கட்டமைக்கப்பட்டிருந்தது. 

மே மாதத்தில் பாலம் மர்மமான முறையில் காணமற்போனது குறித்து ரஷ்ய சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. மே 16இல் விகே பேஜில் பாலத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியதாக புகைப்படங்கள் வெகுவாக பரவின.

grimhg1c

பத்து நாட்களுக்குப் பின்னர் பாலம் இருந்ததற்கான தடயங்களே இல்லை. இடிந்து விழுந்ததில் நீரில் கிடக்கலாம் என்று பார்த்தாலும் உடைந்த பாலத்தின் பெரும்பாலான பகுதிகள் யாவும்  கிடைக்கவும் இல்லை. “யாரேனும் தெரியாதவர்கள் எடுத்துச் சென்றிருக்கலாம் என்றும் கீழேயும் உடைந்த பாலத்தின் குப்பைகள் ஏதுமில்லை என்றே கூறுகின்றனர். இயற்கையாக பாலம் கீழே இறங்குவதற்கு வாய்ப்புகள் இல்லை” என்றும் விகே பக்கத்தில் எழுதப்பட்டது. 

13lceid
1ovrcufg

உள்ளூர் வாசிகள் பாலம் கீழே விழுந்ததும்  திருடர்கள் இரும்பிற்காக அதை திருடி சென்றிருக்கலாம் என்று யூகிக்கிறார்கள். காவல் நிலையத்தில் பாலம் குறித்து புகாரளிக்கப்பட்டுள்ளது. 

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................