This Article is From Apr 17, 2020

தமிழகத்தில் மட்டுமே அதிக ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் உள்ளன: எச்சரிக்கும் ராமதாஸ்

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் 11 மாவட்டங்களும், இரண்டாவது இடத்திலுள்ள டெல்லியில் 10 மாவட்டங்களும் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் அவற்றை விட இரு மடங்கு மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. 

தமிழகத்தில் மட்டுமே அதிக ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் உள்ளன: எச்சரிக்கும் ராமதாஸ்

தமிழகத்தில் மட்டுமே அதிக ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் உள்ளன: எச்சரிக்கும் ராமதாஸ்

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் மட்டுமே அதிக ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் உள்ளன
  • இந்தியாவில் 170 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இதில், 22 மாவட்டங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவையாகும்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் நிறைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும், இந்த நிலையை மாற்றுவது நமக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது, இந்தியாவில் 170 மாவட்டங்களை கொரோனா பாதிப்பு தீவிரமுள்ள சிவப்பு ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக மத்திய சுகாதாரத்துறை வகைப்படுத்தியிருக்கிறது. 

இவற்றில் சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருவாரூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகப்பட்டினம் ஆகிய 22 மாவட்டங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவையாகும்.

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் 11 மாவட்டங்களும், இரண்டாவது இடத்திலுள்ள டெல்லியில் 10 மாவட்டங்களும் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் அவற்றை விட இரு மடங்கு மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. 

தீவிரமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு புதிய தொற்றுகள் எதுவும் ஏற்படவில்லை என்றால் அவை இயல்பு நிலை மாவட்டங்களாக, அதாவது ஆரஞ்ச் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக மாற்றி வகைப்படுத்தப்படும். மேலும், 14 நாட்களுக்கு எந்த புதிய தொற்றும் ஏற்படவில்லை என்றால் அவை கொரோனா பாதிப்பு இல்லாத, பச்சை மாவட்டங்களாக மாற்றப்படும்.

சிவப்பு ஹாட்ஸ்பாட் மண்டலத்தில் இருக்கும் 22 மாவட்டங்களையும் அடுத்தடுத்த நிலைக்குக் கொண்டு செல்வது தான் தமிழக அரசின் முன்பும், தமிழ்நாட்டு மக்களின் முன்பும் இப்போதுள்ள முக்கியக் கடமையாகும்; இது பெரும் சவாலுமாகும்.

இதற்காக நாம் செய்ய வேண்டிய பணி மிகவும் எளிதானது தான். அது ஏற்கெனவே கடந்த பல வாரங்களாக நான் கூறி வருவதைப் போன்று இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேவையின்றி வெளியில் சுற்றாமல், ஊரடங்கை மதித்து நடக்க வேண்டும் என்பது தான்.

ஆனாலும் கூட இன்று முதல் புதிய தொற்றுகள் ஏற்படுவதைத் தடுத்தால் அடுத்த 14 நாட்களில் இந்த மாவட்டங்களை தீவிர பாதிப்பிலிருந்து மீட்டெடுத்து விட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
.