This Article is From Oct 25, 2018

20 கோடி ரூபாய் பணம் கேட்டு பேடிஎம் நிறுவனருக்கு வந்த மீரட்டல்..!

பேடிஎம் சி.இ.ஓ விஜய் ஷேகர் ஷர்மாவுடன் நீண்ட நாள் பணியாற்றிய செயலாளர் சோனியா தவான் கைது செய்யப்பட்டுள்ளார்

பேடிஎம் நிறுவன நிர்வாகம், இச்சம்பவம் பணத்தை குறிவைத்து நடந்தது எனவும் உறுதியான தகவல் வரும் வரையில் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் தகவல் தெரிவித்துள்ளது.

New Delhi:

பேடிஎம் சி.இ.ஓ விஜய் ஷேகர் ஷர்மாவுடன் நீண்ட நாள் பணியாற்றிய செயலாளர் சோனியா தவான் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேடிஎம் நிறுவனர் விஜய் ஷேகர் ஷர்மாவுடன் 10 ஆண்டுகள் பணியாற்றிய செயலாளர் சோனியா தவான் டெல்லிக்கு அருகே உள்ள நொய்டாவில் திங்கட்கிழமை, அவரது அலுவலகத்தில் கைது செய்யபட்டார்.

சோனியா தவான் தனது கனவர் ருபக் ஜெயின் மற்றும் உடன் பணியாற்றும் தேவேந்தர் குமார் ஆகியவருடன் இணைந்து பேடிஎம் நிறுவனத்தின் டேட்டாகளும் மற்றும் விஜய் ஷேகர் ஷர்மாவுடைய தனிப்பட்ட தகவல்களையும் திருடி அதன் மூலம் 20 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சோனியா தவான், பேடிஎம் நிறுவனர் விஜய் ஷேகர் ஷர்மாவுடன், அந்நிறுவனத்தின் தொடக்க காலம் முதல் தற்போதைய அசுர வளர்ச்சி வரை பணியாற்றியுள்ளார். செயலாளராக இருந்ததால் விஜய் ஷேகர் ஷர்மாவின் கணினியை உபயோகப்படுத்தும் சக்தி பெற்றவராக இருந்துள்ளார் சோனியா தவான்.

இந்நிலையில் ரோஹித் கோமல் (போனில் மிரட்டிய நபர்), விஜய் ஷர்மாவின் சகோதர் அஜய் ஷேகர் ஷர்மாவை போனில் 10 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். ரோஹித் கோமலை போலீஸார் தேடிவரும் நிலையில் கொல்கத்தாவில் வசித்துவரும் அவர் தலைமறைவாகியுள்ளார்.

பேடிஎம் நிறுவன நிர்வாகம், இச்சம்பவம் பணத்தை குறிவைத்து நடந்தது எனவும் உறுதியான தகவல் வரும் வரையில் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் தகவல் தெரிவித்துள்ளது.

 

 

.