‘கிரிமினல்ஸ் அவுட்’ என்ற பிரசராத்தை தொடங்கி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு சோதனைகளை மேம்படுத்தினர் (Representational)
Noida:
டெல்லியில் கொலை, கொள்ளை, வன்புணர்வு போன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளன. நொய்டா மற்றும் கிரேடர் நொய்டாவில் தொடர்ந்து 15 நாள் நடந்த தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கெளதம் புத்தா நகர் காவல்துறையினர் ஜூலை 20 தேதி ‘கிரிமினல்ஸ் அவுட்' என்ற பிரசராத்தை தொடங்கி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு சோதனைகளை மேம்படுத்தினர் என்று மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
15 தேடுதல் வேட்டையில் கொள்ளை, கற்பழிப்பு கொலை,கடத்தல், வாகன திருட்டு, ஆயுதக் கொள்ளை போன்ற வழக்குகளில் 448 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்” என்று மூத்த அதிகாரி வைபவ் கிருஷ்ணா தெரிவித்தார்.
மேலும் 38 கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
காவல்துறை தகவல்களின் படி மொத்தம் 71 குற்றவாளிகள் பணம், நகைகள், வாகனம், மொபைல் போன் மற்றும் ஆயுத திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யபட்டுள்ளனர். 10 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களி 19பேர் கேங்க்ஸ்டர்ஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 5பேர் பாலியல் பலாத்கார வழக்கிலும் இருவர் வரதட்சணை மரணத்திலும் ஒருவர் மிரட்டி பணம் பறித்த வழக்கிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.