18 வயதுப் பெண்ணை கொன்று, தற்கொலைக்கு முயன்ற மர்ம நபர் கைது!

நொய்டாவில் இருக்கும் ஒரு வணிக வளாகத்தில் 18 வயது பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் மர்ம நபர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
18 வயதுப் பெண்ணை கொன்று, தற்கொலைக்கு முயன்ற மர்ம நபர் கைது!
Greater Noida: 

ஹைலைட்ஸ்

  1. 18 வயதுப் பெண்ணை, குல்தீப் பல மாதங்களாக பின் தொடர்ந்துள்ளார் என தகவல்
  2. வணிக வளாகத்திலேயே பல முறை குத்தி பெண்ணை கொன்றுள்ளார் குல்தீப்
  3. போலீஸைப் பார்த்தவுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார் குல்தீப்
நொய்டாவில் இருக்கும் ஒரு வணிக வளாகத்தில் 18 வயது பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் மர்ம நபர். பின்னர், தற்கொலை செய்து கொள்ள முயன்ற அந்த நபரை போலீஸ் பிடித்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த நபரின் பெயர் குல்தீப் சிங் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நொய்டாவில் இருக்கும் வணிக வளாகத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வேலை செய்து வந்துள்ளார். அந்த வளாகத்துக்கு காலை 11:30 மணிக்கு வந்த குல்தீப் சிங், பெண்ணை பின் தொடர்ந்துள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் கழிவறைக்கு சென்ற போது குல்தீப் சிங், அவரை பல முறை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார் குல்தீப் சிங். ஆனால், வழியில் போலீஸ் இருப்பதைக் காணும் அவர், தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது, போலீஸ் குல்தீப் சிங்கைப் பிடித்து மருத்துவமனையில் அனுமதித்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் குல்தீப் சிங், சிகிச்சை பெற்று வருகிறார். 

கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள், குல்தீப் சிங் கடந்த சில மாதங்களாகவே தங்களது பெண்ணை பின் தொடர்ந்து வருவதாகவும், அதனால் பெண்ணுக்குத் தனியே ஆட்டோ ஏற்பாடு செய்து வேலைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறியுள்ளனர். கொல்லப்பட்ட பெண் பெற்றோருடன் தாத்ரி பகுதியில் வசித்து வந்தவர். 

‘குல்தீப் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம். அவர் தாத்ரி பகுதியின் கௌதம்புரியில் வசித்து வந்துள்ளார்’ என்று போலீஸ் தரப்பு கூறியுள்ளது.

 


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................