உ.பியில் மருத்துவ மாணவி ஒருவர் கல்லூரி அருகே சடலமாக மீட்பு!

Agra Medical Student Murder: மருத்துவர் ஒருவர் அந்த பெண்ணை துன்புறுத்தியதாகவும், அவருக்கு அச்சுறுத்தல் அளித்ததாகவும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். 

Agra Medical Student Murder: உ.பியில் மருத்துவ மாணவி ஒருவர் கல்லூரி அருகே சடலமாக மீட்பு!

Agra, Uttar Pradesh:

டெல்லியை சேர்ந்த 25 வயது மருத்துவ மாணவி ஒருவர் உத்தர பிரதேசத்தின் அக்ராவில் அவர் படிக்கும் கல்லூரிக்கு ஒரு சில கி.மீ அருகில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ மாணவியை துன்புறுத்தியதாக அவரது குடும்பத்தினரால் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

ஆக்ராவில் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு படித்து வரும் அந்த மாணவியின் குடும்பத்தினர் போலீசாரிடம் கூறும்போது, செவ்வாய்க்கிழமை மாலை முதல் அவரை காணவில்லை. அவரது சடலம் கிடைப்பதற்கு சற்று நேரம் முன்பு அவர் கடத்தப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஆக்ராவை சேர்ந்த போலீஸ் அதிகாரி பாப்லு குமார் கூறும்போது, ஜலாவுனைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் அந்த பெண்ணை துன்புறுத்தியதாகவும், அவருக்கு அச்சுறுத்தல் அளித்ததாகவும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். 

நேற்று காலை அந்த மாணவி உயிரிழந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபர் விசாரிக்கப்பட்டு வருகிறார். அந்த பெண்ணின் தலை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயங்கள் அவர் சில தாக்குதலில் இருந்து விடுப்பட முயற்சித்த போது ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவம் நடந்த பகுதியில் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரிக்க முயற்சித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த சில வாரங்களாக உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு பகிரங்கமான குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால், யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

உத்தர பிரதேசத்தில் கோராக்பூர், புலாந்தசர், ஹாப்பூர், தற்போது கோராக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் திரும்ப திரும்ப நிகழ்ந்து வருகின்றன. உத்தர பிரதேச அரசு பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் முற்றிலும் தோல்வியுற்று வருகிறது என காங்கிரஸ் தலைவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் கிழக்கு உத்தர பிரதேசம் பாதோகியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காணாமல் போன நிலையில், இன்று அவர் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் முகம் மற்றும் உடம்பில் கடுமையான காயங்கள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.