This Article is From Jun 19, 2018

பெண்கள் உள்பட பிற மதத்தினர் பங்கேற்ற “ஓபன் மாஸ்க்”

இந்த நிகழ்ச்சியில் இந்துக்குள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் என பல தரப்பட்ட மக்கள் கலந்து கொண்டு இஸ்லாமியம் கூறும் அறிவுரைகளை தெரிந்து கொண்டனர்

பெண்கள் உள்பட பிற மதத்தினர் பங்கேற்ற “ஓபன் மாஸ்க்”

ஹைலைட்ஸ்

  • இஸ்லாமிய வழிபாடு முறைகள் குறித்து விளக்கப்பட்டட்து
  • பெண்களும் மசூதி வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்
  • சமூக நல்லிணக்கத்துக்கு உதவும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது
பிற மதத்தினரும் இஸ்லாமிய வழிபாடு முறைகள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில், ஐதிராபாத்தில் மெஹதிபட்டினம் மசூதியில் “ஓபன் மாஸ்க்” என்ற நிகழ்ச்சி நடந்தது.

மஸ்ஜித் -இ-குபா என்ற அந்த மசூதி வளாகத்தில் பெண்கள் உள்ளிட்ட பிற மதத்தினர், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் முறையை கேட்டறிந்தனர். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், அவர்களுக்கு இஸ்லாமிய வழிபாட்டு முறையின் தாத்பரியங்களை விளக்கினர்.

மசூதியின் கட்டிட அமைப்பு பற்றியும் தெரிந்து கொள்ள, பிற மத மக்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. சமூக ஆர்வலர் அனுராதா ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி “ அனைத்து மத மக்களிடையே புரிதலை ஏற்படுத்த உதவும்” என்று கூறினர்.

இந்த நிகழ்ச்சி ரமலான் பண்டிகைக்கு அடுத்த நாள் நடந்தது. இந்துக்குள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் என பல தரப்பட்ட மக்கள் கலந்து கொண்டு இஸ்லாமியம் கூறும் அறிவுரைகளை தெரிந்து கொண்டனர். மேலும், மசூதிக்களின் கட்டிட வடிவமைப்பு ஏன் வட்ட வடிவங்களினால் ஆன கோபுரங்கள் கொண்டிருக்கிறது என்பதையும் விளக்கினர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு, பேரிச்சம்பழம் மற்றும் ஷீர் குர்மா என்ற பால் மற்றும் உலர் பழங்களால் செயத இனிப்பு வகையும் வழங்கப்பட்டது.

(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.