This Article is From Sep 07, 2018

2016-ல் பிறப்பித்து உத்தரவை மதிக்காத உள்துறை… குட்டுவைத்த உயர் நீதிமன்றம்!

இந்த வழக்கு தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

2016-ல் பிறப்பித்து உத்தரவை மதிக்காத உள்துறை… குட்டுவைத்த உயர் நீதிமன்றம்!

தமிழக காவல் துறையில் இருக்கும் துணை ஆய்வாளர்கள் பதவி உயர்வு தொடர்பாக ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டே, தமிழக உள்துறை அமைச்சகம் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை உள்துறை அதிகாரிகள் எந்தவித பதில் மனுவையும் தாக்கல் செய்யவில்லை. இதனால் கோபமடைந்த நீதிமன்றம், கறாரான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது குறித்தான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது. நீதிபதி எஸ்.வைத்தியநாதன் வழக்கை விசாரித்து வருகிறார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதி, ‘இந்த வழக்கு தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இது நாள் வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெறுமனே காலக்கெடு நீட்டிப்புக்கு மட்டும் அனுமதி கோரப்படுகிறது. வரும் 27 ஆம் தேதிக்கு முன்னர் இந்த வழக்கு தொடர்பான பதில் மனுவை தமிழக உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில், அவர் 25,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் அவர் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும்’ என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.