This Article is From Jun 16, 2018

நியூட்டன்,டார்வின் சமாதிக்கு நடுவில் ஹாக்கிங்ஸின் அஸ்த்தி

ஹாக்கிங்க்ஸின் சாம்பள் வைக்கப்பட்ட, அபேவில் உள்ள “சைன்டிஸ்ட் கார்னர்” என்று அழைக்கப்படுகிறது

நியூட்டன்,டார்வின் சமாதிக்கு நடுவில் ஹாக்கிங்ஸின் அஸ்த்தி

நிகழ்வில் பங்கேற்க உலகம் முழுவதிலிருந்தும் 1000 பேர், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

ஹைலைட்ஸ்

  • மார்ச் 14, 2018 அன்று ஹாக்கிங்ஸ் காலமானார்
  • அறிஞர்கள், பிரபலங்கள் என 1000 பேர் இறுதி மரியாதை செய்தனர்
  • கல்லரையில், ஹாக்கிங்ஸின் கருந்துகள் ஃபார்முலா பொறிக்கப்பட்டுள்ளது
சமீபத்தில் மரணம் அடைந்த இயற்பியல் அறிஞர் ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸின் அஸ்த்தி, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே என்ற இடத்தில் அறிவியல் மேதைகள் ஐஸக் நியூட்டன் மற்றும் சார்லஸ் டார்வின் ஆகியோரின் கல்லறைக்கு மத்தியில் இறுதி மரியாதையுடன் புதைக்கப்பட்டது.

உலகின் முக்கிய அறிவியல் அறிஞர்கள், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், நோபள் பரிசு வென்றவர்கள், நடிகர்கள் மற்றும் மாணவர்கள் அவருக்கு இறுதி மரியாதை செய்ய கூடியிருந்தனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்க உலகம் முழுவதிலிருந்தும் 1000 பேர், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இறுதி நிகழ்வில் பங்கேற்க சுமார் 25 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதன் மூலம் ஹாக்கிங்ஸின் பங்களிப்பு எத்தகையது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஹாக்கிங்ஸின் சாம்பள் வைக்கப்பட்ட, அபேவில் உள்ள “சைன்டிஸ்ட் கார்னர்”என்ற இடம், ஐக்கிய நாடுகளில் சிறந்து விளங்கும் அறிவியல் அறிஞர்களின் அஸ்த்தி வைப்பதற்கு என்றே சிறப்பாக ஒதுக்கப்பட்ட இடம். இங்கு மைக்கேல் ஃபேரடே, ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல், ஐஸக் நியூட்டன் ஆகியோரது அஸ்த்தி இங்கு வைக்கப்பட்டுள்ளது. ஹாக்கிங்ஸின் இந்த கல்லறைக் குறிப்பில், அவர் வகுத்த கருந்துகள் குறித்த ஃபார்முலா பொறிக்கப்பட்டுள்ளது.

(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.