This Article is From Dec 21, 2019

Viral pic: தயவு செய்து டெலிட் பண்ணுங்க இணையவாசிகளை அலற வைத்த புகைப்படம்

மற்றொரு ரெட்டிட் பயனர் “உங்கள் நாடு திகிலூட்டும் அசுர மிருகங்களால் நிரம்பியுள்ளது” என்று கமெண்ட் செய்திருந்தார்.

Viral pic: தயவு செய்து டெலிட் பண்ணுங்க இணையவாசிகளை அலற வைத்த புகைப்படம்

ட்ராண்டுலா பருந்து குளவிகள் தங்கள் இரையை முடக்கி தங்களின் கூடுகளுக்கு இழுத்துச் செல்கின்றது

வேட்டைக்கார சிலந்தி ஒன்றினை ஆரஞ்சு வண்ண குளவி ஒன்று இழுத்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

சிலந்தியை முதுகில் சுமந்து செல்லும் ஆரஞ்ச் குளவியின் பயங்கரமான புகைப்படம் இரண்டு நாட்களுக்கு முன்பு ரெட்டிட்-இல் பகிரப்பட்டது. அங்கு இது 39000க்கும் அதிகமான முறை பகிரப்பட்டது. 

ட்ராண்டுலா பருந்து குளவிகள் தங்கள் இரையை முடக்கி தங்களின் கூடுகளுக்கு இழுத்துச் செல்கின்றது. சிலந்தியின் உடலை முட்டைகளை இட்டு பாதுகாப்பதற்கான இடமாக மாற்ற இழுத்துச் செல்கின்றன என்று பிபிசி தெரிவித்துள்ளது. இதற்கிடையில் வேட்டைச் சிலந்திகளான  லெக் ஸ்பானால் உலகின் மிகப்பெரிய சிலந்தியாக கருதப்படுகின்றன.

வேலையிலிருந்து வீட்டிற்கு சென்றபோது ட்ராண்டுலா பருந்து குளவி ஒரு வேட்டைக்காரர் சிலந்தியை கண்டுபிடித்தேன் என்று புகைப்படத்தை ஆன்லைனில் பகிர்ந்த ரெட்டிட் பயனர் எழுதினார். 

இணையத்தை பயமுறுத்திய புகைப்படத்தை இங்கே பார்க்கலாம்: 

got home from work to find this Tarantula Hawk wasp carting off a huntsman spider (Sydney, Australia) from r/pics

படம் ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து 3,600க்கும் மேற்பட்ட கருத்துகளை பெற்றுள்ளது.

தயவுசெய்து ஆஸ்திரேலியா இதை நீக்கிவிடு என்று ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். மற்றொருவர், “சரி நான் இனி ஆஸ்திரேலியனாக இருக்க விரும்பவில்லை. நான் போலாந்திற்கு செல்கிறேன். அங்கு என் வாழ்க்கையை ஆடுபோல் வாழ்வேன்” என்று கூறியிருந்தார்.

மற்றொரு ரெட்டிட் பயனர் “உங்கள் நாடு திகிலூட்டும் அசுர மிருகங்களால் நிரம்பியுள்ளது” என்று கமெண்ட் செய்திருந்தார்.

Click for more trending news


.