This Article is From Oct 21, 2019

Haryana Assembly Election 2019 : வாக்குச் சாவடிக்கு டிராக்டரில் வந்த துஷ்யந்த் சவுதலா

Haryana Election 2019: ஜிந்த் மாவட்டத்தில் உச்சனா கலனில் துஷ்யந்த் சவுதலா போட்டியிடுகிறார். அவரது கட்சி 90 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

Haryana Assembly Election 2019 : வாக்குச் சாவடிக்கு டிராக்டரில் வந்த  துஷ்யந்த் சவுதலா

Haryana polls 2019: தனது மனைவி மற்றும் தாயுடன் வாக்குசாவடிக்கு வந்த சவுதலா

Chandigarh:

ஹரியானாவில் ஜாட் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் ஒரு இடத்தில் ஜன்னாயக் ஜனதா கட்சியின் முன்னணி வேட்பாளர் துஷ்யந்த் சவுதலா டிராக்டரில் வந்து வாக்களித்தார்.

அவருடன் அவரின் தாயார் நைனா சாத்லா மற்றும் அவரின் மனைவியும் உடன் வந்தனர்.

ஜன்னாயக் ஜனதா கட்சி ஒருகாலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த  இந்திய தேசிய மக்கள் தளத்திலிருந்து பிரிந்த ஒரு பிரிவாகும். “ஹரியானாவில் மக்கள் மாற்றத்தை தேடுகிறார்கள், நாங்கள் எங்கள் அடையாளமான டிராக்டரை தேர்ந்தெடுத்து வாக்குச் சாவடிக்கு வந்து சேர்ந்தோம்” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

கிளர்ச்சி மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார் அளித்த ஆதரவு தனது கட்சிக்கு அதிகபட்ச இடங்களைப் பெற உதவும் என்று ஒப்புக் கொண்டார்.

ஒவ்வொரு துளியும் கடலுக்கு பங்களிக்கிறது. அது போல மக்கள் ஒவ்வொருவராய் எங்கள் கட்சியில் சேருகிறார்கள் எங்கள் கட்சியை பலப்படுத்துகிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஜிந்த் மாவட்டத்தில் உச்சனா கலனில் துஷ்யந்த் சவுதலா போட்டியிடுகிறார். அவரது கட்சி 90 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

.