ரூ. 15 ஆயிரம் ஸ்கூட்டரை தர மறுத்தவருக்கு ரூ. 23 ஆயிரத்திற்கு அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே இருந்த போக்குவரத்து விதி மீறல் அபராதங்கள் திருத்தப்பட்டு தற்போது புதிய அபராதங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விபத்தை குறைப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய முறை நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் டெல்லி அருகேயுள்ள குருகிராமத்தை சேர்ந்த தினேஷ் மதன் என்பவர் ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார். அவரை மடக்கிப்பிடத்த ட்ராபிக் போலீசார், அவரிடம் ஆர்.சி. புக் உள்ளிட்டவற்றை கேட்டுள்ளனர்.
.
அவை ஏதும் இல்லாததால், ஸ்கூட்டரை தங்களிடம் ஒப்படைக்குமாறு ட்ராபிக் போலீசார் வலியுறுத்தினர். இதற்கு மதன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒவ்வொரு விதி மீறலுக்கும் போலீசார் அபராதம் போட்டுத்தீட்டத் தொடங்கினர்.
இதன்படி, லைசென்ஸ் இல்லாமல் வந்ததற்கு ரூ. 5 ஆயிரம், ஆர்.சி. புக் இல்லாமல் வந்ததற்கு ரூ. 5 ஆயிரம், இன்சூரன்ஸ் இல்லாமல் வந்ததற்கு ரூ. 2 ஆயிரம், சுற்றுச் சூழல் விதிகளை மீறியதற்காக ரூ. 10 ஆயிரம், ஹெல்மெட் இல்லாமல் வந்ததற்காக ஆயிரம் ரூபாய் என அபராதம் மட்டும் ரூ. 23 ஆயிரத்திற்கு போடப்பட்டுள்ளது.
இந்த அபராத செல்லான்களை செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ.க்கு அளித்த மதன், தான் வந்த ஸ்கூட்டரின் மதிப்பே ரூ. 15 ஆயிரம்தான் இருக்கும் என புலம்பத் தொடங்கியுள்ளார்.
With inputs from ANI