This Article is From Sep 25, 2019

பருவநிலை மாற்றம் : பனிப்பாறை உருகுவதால் இரண்டரை மடங்கு வேகமாக உயரும் கடல் மட்டம்!!

மனிதச் செயல்பாடுகள் காரணமாக புவி வெப்பமடைதல் அதிகரிக்கிறது. இதன் விளைவாக பனிப் பாறைகள் உஷ்ணம் தாங்க முடியாமல் உருகத் தொடங்குகின்றன.

பருவநிலை மாற்றம் : பனிப்பாறை உருகுவதால் இரண்டரை மடங்கு வேகமாக உயரும் கடல் மட்டம்!!

2005-ல் இருந்து கணக்கெடுத்துப் பார்க்கும் போது இரண்டரை மடங்கு அதிகரித்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

Monaco:

புவி வெப்ப மயமாதல் காரணமாக கடந்த 2005-ல் இருந்து கடல் நீர் மட்டம் இரண்டரை மடங்கு உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உலக நாடுகள் அனைத்திற்கும் புவி வெப்பமயமாதல் என்பது பொதுவான பிரச்னையாக மாறியுள்ளது. மனிதனின் செயல்பாடுகள் காரணமாக புவியை பாதுகாக்கும் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது. இதனால், சூரிய கதிர்கள் நேரடியாக புவியை தாக்குவதால், பூமியின் வெப்பம் அதிகரிக்கத் தொடங்குகிறது. 

இதன் விளைவாக, பனிப் பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் படிப்படியாக உயர்வதால், கடலையொட்டியுள்ள பகுதி மூழ்கி விடுகின்றன. சர்வதேச அளவில் இந்தப் பிரச்னைதான் மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில், புவியின் வெப்பம் அதிகரித்து பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால் கடல் நீர் மட்டம் எதிர்பார்த்ததை விட இரண்டரை மடங்கு உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த 2005-ல் இருந்து கணக்கெடுத்துப் பார்க்கும் போது இரண்டரை மடங்கு அதிகரித்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்த வேகம் 2100-ல் நான்கு மடங்காக அதிகரிக்கும் என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.