14 கால்களுடன் ராட்சத 'கரப்பான் பூச்சி'! திகைக்கவைக்கும் கண்டுபிடிப்பு!!

ஐசோபாட் வகை உயிரினங்களில் இதுதான் மிகப்பெரியது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்

14 கால்களுடன் ராட்சத 'கரப்பான் பூச்சி'! திகைக்கவைக்கும் கண்டுபிடிப்பு!!

இந்த கடற் கரப்பான் பூச்சி 20 இன்ச் நீளம் வளரக்கூடியது என சொல்லப்படுகிறது

14 கால்களுடன் கூடிய பெரிய கரப்பான் பூச்சி மாதிரியான கடல் உயிரினத்தை சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் கடல் ஆய்வு ஒன்றை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, சுமார் 14 நாட்கள் மேற்கு ஜாவா கடற்கரையில் ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது 12 ஆயிரத்திற்கும் அதிகமான கடல்வாழ் உயிரனங்களைச் சேகரித்தனர். அவ்வாறு சேகரிக்கும் போது, பெரிய அளவிலான கரப்பான் பூச்சி போல தென்பட்ட உயிரினம் ஆழ்கடலில் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். 

அந்த கடல்வாழ் உயிரினம் அப்படியே கரப்பான் பூச்சியைப் போன்றே இருப்பதாகவும், மொத்தம் 14 கால்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அதற்கு பாத்தினோமஸ் ரக்சசா (Bathynomus Rakasa) என்று பெயரிட்டுள்ளனர். 

கடல்வாழ் கரப்பான் பூச்சியை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், அது 20 இன்ச் (50 செ.மீ) வரையில் வளரும் என்றும், ஐசோபாட் வகை உயிரினங்களில் இதுதான் மிகப்பெரியதாக உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
 

ஆழ்கடலைப் பொறுத்தவரையில் அதிக கால்களுடன் நண்டு உள்ளிட்ட உயிரினங்கள் உண்டு. ஆனால், கரப்பான் பூச்சியின் தோற்றத்தில் இருப்பது பார்ப்போரை அதிரவைத்துள்ளது. இதற்குப் பல கண்கள் உள்ளது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more trending news