அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய விகாரமான ‘பிரமாண்ட மிருகத்தின்’ சடலம் - வைரலான படங்கள்!

ஒருவர், “மேமத் மிருகம் போன்று உள்ளது. அவை அழிந்துவிட்டன என்று எனக்குத் தெரியும். ஆனால், அதைப் போலத்தான் உள்ளது” என்கிறார் ஆச்சரியத்துடன்.

அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய விகாரமான ‘பிரமாண்ட மிருகத்தின்’ சடலம் - வைரலான படங்கள்!

இன்னொருவர், “இது ஒரு திமிங்கலமாக இருக்கலாம். அது மாட்டைச் சாப்பிட்ட பின்னர் இப்படியான நிலையில் கரை ஒதுங்கியிருக்கலாம்” என்று தன் அனுமானத்தை சொல்கிறார். 

இங்கிலாந்து நாட்டின் கடற்கரையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட மிருகத்தின் சடலம் ஒன்று பலரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. அயின்ஸ்டேல் கடற்கரையில் பிரமாண்ட மிருகத்தின் சடலம் ஒதுங்கியுள்ளது. இது குறித்தான புகைப்படங்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. படத்தில் இருக்கும் மிருகம் என்னவாக இருக்கும் என்பதில் நெட்டிசன்களுக்கு மத்தியில் பெரும் குழப்பம் எழுந்துள்ளது. 

மிருகத்தின் சடலத்தைக் கண்டுபிடித்த நபர், லிவர்பூல் எக்கோ என்னும் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “அந்த மிருகத்துக்கு துருத்திக் கொண்ட நின்ற நான்கு எலும்புகள் இருந்தன. அதுதான் மிகவும் வியப்பாக உள்ளது. அதன் மேல் ரோமங்களும் அடர்த்தியாக இருந்தன. அந்த மிருகம் சுமார் 15 அடி நீளம் இருக்கலாம். துருத்திக் கொண்டு நின்ற எலும்புகள் 4 அடி உயரம் இருக்கலாம். அந்த மிருகத்திடம் ஏதோ ஒன்று கூடுதலாக இருக்கிறது. அதுதான் என்னவென்று புரியவில்லை” என்கிறார். 

ஃபேஸ்புக்கில் விசித்திர மிருகத்தின் சடலம் பற்றிய புகைப்படங்கள் பகிரப்பட்டத்திலிருந்து 100-க்கும் மேற்ப்பட்டவர்கள் தங்களது கமென்டுகளை இட்டு வருகின்றனர். 
 

அதில் ஒருவர், “மேமத் மிருகம் போன்று உள்ளது. அவை அழிந்துவிட்டன என்று எனக்குத் தெரியும். ஆனால், அதைப் போலத்தான் உள்ளது” என்கிறார் ஆச்சரியத்துடன்.

இன்னொருவர், “இது ஒரு திமிங்கலமாக இருக்கலாம். அது மாட்டைச் சாப்பிட்ட பின்னர் இப்படியான நிலையில் கரை ஒதுங்கியிருக்கலாம்” என்று தன் அனுமானத்தை சொல்கிறார். 

நேச்சுரல் இங்கிலாந்து அமைப்பின் மூத்த ஆலோசகர், ஸ்டீஃபன் அய்லைஃப், தி சன் செய்தி நிறுவனத்திடம் இது பற்றி பேசுகையில், “இந்த மிருகமானது, மிகவும் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. அது என்ன விலங்கு என்பதை எங்களால் தற்சமயம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அது ஒரு திமிங்கலமாக இருக்கலாம்.

கடற்கரையிலிருந்து மிருகத்தின் சடலத்தை முழுவதுமாக நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” எனத் தகவல் தெரிவித்துள்ளார். 

Click for more trending news