This Article is From Jul 21, 2020

டெல்லியில் பத்திரிக்கையாளர் மீது நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு!

தாக்கப்பட்டவரை நோக்கி அவரது மகள் ஓடிவந்து உதவியை பெற முயற்சிப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இந்த தாக்குதல் இரவு 10:30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

பத்திரிகையாளர் திங்கள்கிழமை இரவு 10:30 மணியளவில் சுடப்பட்டார்.

Ghaziabad:

தேசிய தலைநகர் டெல்லியின் காசியாபாத் பகுதியில் பத்திரிக்கையாளர் ஒருவர் சுட்டு படுகொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்தான காட்சிகள் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி தனது இரண்டு மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு குழு அவரைத் தாக்கி அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஜோஷியின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயத்தினை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலீசார் கூறும் முக்கிய குற்றவாளிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஜோஷியின் குடும்பத்தினருக்கு தெரிந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் ஜோஷியின் பைக்கை கும்பல் ஒன்று தடுத்து நிறுத்திய ஜொஷியை தாக்கி கீழே தள்ளியது. இந்நிலையில் ஜோஷியின் மகள்கள் இருவரும் தப்பியோடியுள்ளனர். பின்னர் கீழே வீழ்ந்து கிடந்த ஜோஷியை எழுப்பி நிற்க வைத்து பின்னர் துப்பாக்கியால் தாக்கியுள்ளனர். வீடியோவில் துப்பாகியால் சுடப்படுவது தெளிவாக தெரியவில்லையென்றாலும் ஜோஷயை தாக்குவது தெளிவாக தெரிகின்றது.

தாக்கப்பட்டவரை நோக்கி அவரது மகள் ஓடிவந்து உதவியை பெற முயற்சிப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இந்த தாக்குதல் இரவு 10:30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

“விஜய் நகரில் பத்திரிகையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று தனது சகோதரியின் இடத்திலிருந்து திரும்பும் போது தாக்கப்பட்டதாக ஜோஷியின் சகோதரர் எங்களுக்குத் தெரிவித்தார்.” என்று மூத்த போலீஸ் அதிகாரி கலாநிதி நதானி தெரிவித்துள்ளார்.

.