‘’ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்’’ – பாஜகவின் கூட்டணி கட்சி பாராட்டு!!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கின்றன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘’ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்’’ – பாஜகவின் கூட்டணி கட்சி பாராட்டு!!

நாளை மறுதினம் வாக்குகள் எண்ணப்படுகின்றன.


Mumbai: 

ராகுலும், பிரியங்கா காந்தியும் கடின உழைப்பாளிகள் என்று பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா பாராட்டியுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும் என தெரிவித்துள்ள நிலையில், நாளை மறுதினம் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. சிவசேனா ‘சாம்னா' என்ற நாளிதழை நடத்தி வருகிறது. இதில் வெளியாகும் தலையங்க கருத்துகள் சிவசேனாவின் நிலைப்பாடாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது-

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று யாரும் கூறத் தேவையில்லை. ஏனென்றால் மக்கள் எல்லோரும் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மகாராஷ்டிராவை பொறுத்தளவில் சிவசேனா – பாஜக கூட்டணி வரலாறு காணாத வெற்றியை இந்த தேர்தலில் பெறும். 2014 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சியாக வருவதற்கு போதிய இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த முறை ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக வந்து விடுவார்.

இதனை ராகுல் காந்தியின் வெற்றியாக பார்க்க வேண்டும். ராகுல் காந்தியும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள். இந்த முறை காங்கிரஸ் கட்சி மத்தியில் எதிர்க்கட்சியாக அமையும்.

இவ்வாறு தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................