பூண்டை இப்படி கூட உரிக்கலாமா..?- பாருங்க, கத்துக்கோங்க! #ViralVideo

ஆன்லைனில் இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து 2.1 கோடி தடவை பார்க்கப்பட்டுள்ளது.

பூண்டை இப்படி கூட உரிக்கலாமா..?- பாருங்க, கத்துக்கோங்க! #ViralVideo

பல நட்சத்திரங்களும் இந்த வீடியோவைப் பகிர்ந்து, தங்களது வியப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

சமையல் என்பது சாதரண விஷயமல்ல. அதிலும் பூண்டை உரித்து சமையல் செய்வது சிலருக்குக் கொடுமையிலும் கொடுமையாக இருக்கலாம். ஆனால், பூண்டை சுலபமாக எப்படி உரிக்கலாம் என்பது குறித்து ட்விட்டர் பயனர் ஒருவர் வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் படுவைரலாக பகிரப்பட்டு வருகிறது.

@VPestilenZ என்கிற ட்விட்டர் பயனர், “நான் அதிகமாக கொரிய உணவுகளை சமைப்பேன். அதற்கு பூண்டு அதிகமாக தேவைப்படும். அப்படி தேவைப்படும் பூண்டை உரிப்பதற்கு இதுதான் சிறந்த வழி” என்று பதிவிட்டு, கூடவே பூண்டை உரிக்கும் வீடியோவையும் அப்லோடு செய்துள்ளார். 
 

அந்த வீடியோ கீழே பார்க்கலாம்:

அந்த வீடியோவில், ஒரு கத்தி மூலம், பூண்டில் குத்தி உருவப்படுகிறது. அப்படி உருவும்போது பூண்டின் மேல் தோல் மட்டும் அப்படியே இருக்கிறது. ஆனால் பூண்டு அழகாக வெளியே வந்துவிடுகிறது. 

இந்த வகை பூண்டு உரித்தல் மூலம், கைகள் பசபசக்காது என்பதாலும், நகத்தின் இடுக்கில் காயம் ஏற்படாது என்பதாலும், இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. பலரும் இந்த எளிய பூண்டு உரிக்கும் முறையை வியந்து பகிர்ந்து வருகின்றனர். 

ஆன்லைனில் இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து 2.1 கோடி தடவை பார்க்கப்பட்டுள்ளது. பல நட்சத்திரங்களும் இந்த வீடியோவைப் பகிர்ந்து, தங்களது வியப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
 

Click for more trending news


Listen to the latest songs, only on JioSaavn.com