This Article is From Dec 27, 2018

இனி ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திற்கு தனி உயர்நீதிமன்றம்!

உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதனே, ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திற்கு தனி உயர்நீதிமன்றம்!

ஆந்திர பிரதேச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதிக்கு கீழ் 15 நீதிபதிகள் செயல்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கான தனி உயர்நீதிமன்றம் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமராவதி நகரில் செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலம் 2014 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. நீண்ட போராட்டங்களுக்கு பிறகு தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பாக உயர்நீதிமன்றம் உட்பட அனைத்து முக்கிய அரசு அலுவலகங்களும் ஐதராபாத்தில் தான் இருந்தது. 

பின்னர்,அமராவதி ஆந்திராவுக்கான தலைநகரானது. மாநிலங்கள் பிரிந்ததை போலவை ஐதரபாத்தில் உள்ள உயர்நீதிமன்றமும் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இருதரப்பினரும் முன் வைத்தனர்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இனி ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு தனித்தனியாக உயர்நீதிமன்றங்கள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆந்திராவுக்கான தனி உயர்நீதிமன்றம் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமராவதி நகரில் செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர உயர்நீதிமன்றத்திற்கு 16 நீதிபதிகளும், தெலுங்கானாவுக்கான உயர்நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகளும் இருப்பார்கள்.

முன்னதாக, ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஆந்திராவுக்கு தனி உயர்நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவுருத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

.