This Article is From Nov 27, 2018

'‘பேச்சில் கொஞ்சம் கவனம் வேண்டும்!’ - மோடிக்கு மன்மோகன் அட்வைஸ்!

பிரதமர் மோடி தேர்தல் பிரசாரங்களுக்காக எங்கு சென்றாலும் காங்கிரஸ் மூத்த தலைவர்களைத் தாக்கிப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்

'‘பேச்சில் கொஞ்சம் கவனம் வேண்டும்!’ - மோடிக்கு மன்மோகன் அட்வைஸ்!

சிறந்த முன் உதாரணமாக பிரதமர் மோடி இருக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்

ஹைலைட்ஸ்

  • பிரதமர் தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது, சிங்
  • பிரசாரங்களில் மோடி கடுமையாக பேசி வருகிறார்
  • நேரு-காந்தி குடும்பத்தை மோடி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்
New Delhi:

பிரதமர் மோடி பாஜக ஆளும் மாநிலங்களைத் தவிர்த்து இதர மாநிலங்களுக்குச் செல்லும் போது சில கட்டுப்பாடுகளைப் பழகிக்கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், ஒரு நாட்டின் பிரதமராக தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் ஒரு சிறந்த முன் உதாரணமாக பிரதமர் மோடி இருக்க வேண்டும் என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மன்மோகன் சிங் சமீபத்தில் பங்குபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘பாஜக ஆளும் மாநிலங்களைத் தவிர்த்து இதர மாநிலங்களூக்கு பிரதமர் மோடி செல்லுகையில் தற்போதைய அரசியல் சூழலில் பலரும் பயன்படுத்தி வரும் தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் தனக்குத் தானே கட்டுப்பாடி விதித்துக்கொள்ள வேண்டும்.

அதனால் நான் கூற வருவது என்னவென்றால், ஒரு நாட்டின் பிரதமராக இருப்பவர் மக்கள் பலருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டும். இதனால் அவரது நடத்தை மற்றும் நடவடிக்கைகள் ஒரு பிரதமருக்குத் தேவையான தகுதிகளுடன் ஒத்திருக்க வேண்டும்' என்றார்.

பிரதமர் மோடி தேர்தல் பிரசாரங்களுக்காக எங்கு சென்றாலும் காங்கிரஸ் மூத்த தலைவர்களைத் தாக்கிப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கூடுதலாக நேரு- காந்தி குடும்பத்தாரையும் மோசமாகத் தாக்கி வருகிறார். சில நாள்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பார்த்து, “உங்களது தாத்தா, பாட்டி சட்டிஸ்கர் மாநில வளர்ச்சிக்கு உதவினார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், “நீங்கள் கடந்த 100 ஆண்டுகளாக ஏன் செய்யவில்ல? நான்கு தலைமுறைகளாக என்ன செய்தீர்கள்? பதில் சொல்லுங்கள்? தண்ணீர் குழாய்கள் அமைத்துத் தந்தீர்களா? உங்களது பாட்டியும் தாத்தாவும் செய்து தந்தார்களா? முதலில் நீங்கள் ஏன் செய்யவில்லை எனச் சொல்லுங்கள். பின்னர் எங்களிடம் ஏன் செய்யவில்லை எனக் கேட்கலாம்” என ஒரு தேர்தல் பிரசாரத்தின் போது மோடி விமர்சித்தார்.

இதற்குத் தான் காங்கிரஸ் தரப்பில் பெரும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், ‘மோடி தன்னுடைய பிரச்சாரங்களில் பொய்யான கருத்துகளைப் பரப்பி வரலாறை பொய்மைப்படுத்தி வருகிறார்' எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.

.