This Article is From Aug 19, 2019

அரசு பங்களாக்களை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்களுக்கு 7 நாட்கள் கெடு! 3 நாளில் பவர் கட்!!

டெல்லி லுட்யென்ஸ் பகுதியில் 2014-ல் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. சுமார் 200 பேர் வீட்டை காலி செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.

அரசு பங்களாக்களை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்களுக்கு 7 நாட்கள் கெடு! 3 நாளில் பவர் கட்!!

மக்களவை கலைக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் முன்னாள் எம்.பி.க்கள் பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்பது விதிமுறை.

New Delhi:

அரசு பங்களாக்களை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்களுக்கு 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் அங்கு அளிக்கப்பட்டு வரும் மின்சாரம், தண்ணீர் சப்ளை உள்ளிட்டவை நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நாடாமன்ற உறுப்பினர்களுக்காக டெல்லி லுட்யென்ஸ் பகுதியில் பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எம்.பி.க்களாக பொறுப்பில் இருக்கும் வரையில் இந்த பங்களாக்களில் தங்கிக் கொள்ளலாம். 

தற்போது 2014-ம் ஆண்டு மக்களவை கலைக்கப்பட்டு புதிய மக்களவை அமைந்து 3 மாதங்களை கடந்து விட்டன. இருப்பினும் சுமார் 200 எம்பிக்கள் தங்களது பங்களாவை காலி செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.  

மக்களவை கலைக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் எம்.பி.க்கள் பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்பது விதிமுறை. ஏற்கனவை கடந்த 2014-ல் எம்.பி.க்களாக இருந்த சிலர் தற்போதும் அந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று புதியதாக நாடாளுமன்றத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை 200-யை தாண்டியுள்ளது. 

பழையவர்கள் பங்களாக்களை காலி செய்யாததால், புதிய எம்பிக்களுக்கு அவற்றை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறத. இதற்காக வெஸ்டர்ன் கோர்ட் பகுதியில் தற்காலிக தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அரசு பங்களாக்களை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்களுக்கு 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் அங்கு அளிக்கப்பட்டு வரும் மின்சாரம், தண்ணீர் சப்ளை உள்ளிட்டவை நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவலை எம்.பி.க்களுக்கு வீடு வசதி அளித்து தரும் கமிட்டியின் தலைவர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.

.