This Article is From Sep 03, 2019

Kashmir: பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக இணைய சேவை முடக்கப்படாது: ஜெய்சங்கர்

எனினும், வரும் நாட்களில காஷ்மீரில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Kashmir: பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக இணைய சேவை முடக்கப்படாது: ஜெய்சங்கர்

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என ஜெய்சங்கர் கூறினார்.

Srinagar:

காஷ்மீரில் தொலைபேசி மற்றும் மொபைல் இணைய சேவைகளுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நியாயப்படுத்தி கூறியுள்ளார், பயங்கரவாதிகளுக்கு இடையிலான தொடர்புகளை நிறுத்த இது தேவை என்று கூறினார். 

இதுதொடர்பாக, "சில நாட்களுக்கு முன்பு பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் உள்ள பொலிடிகோ பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், "காஷ்மீர் முழுவதையும் பாதிக்காமல் போராளிகளுக்கிடையேயான தகவல்தொடர்புகளை நிறுத்த முடியாது. ஒருபுறம் மக்களுக்கு இணைய சேவை வழங்கிவிட்டு, மறுபுறம் பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் எஜமானர்களுக்கும் இடையிலான தொடர்புகளை நான் எவ்வாறு துண்டிப்பது, ஆனால் மற்றவர்களுக்கு இணைய சேவையை வழங்குவது எப்படி என்பதை அறிந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைவேன் என்று அவர் கூறியிருந்தார்.

செய்தி நிறுவனமான பிடிஐ தகவலின் படி, ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புத் தடைகள் குறித்து அமெரிக்கா உட்பட பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஃபெடெரிகா மொகெரினி இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் சமீபத்தில் அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தபோது, "காஷ்மீர் மக்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் மீட்டெடுக்க" வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

எனினும், வரும் நாட்களில காஷ்மீரில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  காஷ்மீர் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படும், இது காவல்துறையினர் அவர்களது வழக்கமான கடமைகளுக்கு மீண்டும் பணியில் அமர்த்தப்பட வழிவகுக்கும். மேலும், "வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், அவர்களுக்கு வேறு பணிகள் செய்ய வேண்டியவை உள்ளன என்று அவர் கூறினார். 

முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சட்டப் பேரவை உடன் கூடிய யூனியன் பிரதேசமாக அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா தரப்பில் பதில் கூறப்பட்டது. இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்து சென்றது. எனினும் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது.

இதனிடையே, இந்தியா - பாக்., இடையே பதற்றமான நிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ஒருபோதும் இந்தியாவுடன் போரை தொடங்காது என பாக்., பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் இரண்டுமே அணு ஆயுதங்கள் உள்ள நாடுகள் என்றும், இவ்விரண்டு நாடுகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்தால் உலகமே அபாயத்தை எதிர்க்கொள்ளும் என கூறினார். 

எந்த பிரச்னைக்கும் யுத்தம் ஒரு தீர்வாகாது. போரில் வெற்றி பெற்றவரே தோல்வியடைந்தவருமாவார், போர் பல புதிய பிரச்னைகளுக்கு காரணமாக அமையும் என்று அவர் கூறியிருந்தார். 

.