This Article is From Jul 11, 2019

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர்

Chennai water crisis: சரக்கு ரயிலில் 50 வேகன்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேகனும் 54 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்டதாகும்.

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு  ரயில் மூலம் குடிநீர்

இந்த ரயில்கள் 220 கி.மீ தூரத்தில் உள்ள சென்னை வில்லிவாக்கத்தை அடைய 5 மணிநேரமாகும் (Representational)

Chennai:

ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு இன்று முதல் ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் இருந்து ரயில்கள் மூலமாக காவிரி கூட்டுக் குடிநீரை கொண்டு வர  தமிழக அரசு உத்தரவிட்டது.

சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்ல ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ரயில் வேகன்கள்  ஜோலார் பேட்டைக்கு நேற்று காலை வந்தடைந்தன. சரக்கு ரயிலில் 50 வேகன்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேகனும் 54 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்டதாகும். இதில் 50 ஆயிரம் லிட்டர் குடிநீர்  நிரப்பப்படும். ஒருமுறைக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீர் நிரப்பப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்படும்.  

தெற்கு ரயில்வேக்கு சென்னை மெட்ரோ குடிநீர் ஆணையம் ஒவ்வொரு பயணத்திற்கும் 7.5 லட்சம் கொடுக்க வேண்டும்.  இந்த திட்டத்துக்காக ரூ. 65 கோடி வரை ஒதுக்கபட்டுள்ளது. 

இந்த ரயில்கள் 220 கி.மீ தூரத்தில் உள்ள சென்னை வில்லிவாக்கத்தை அடைய 5 மணிநேரமாகும். அங்கிருந்து கீழ்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு விநியோகிக்கப்படும். 

சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்லவுள்ள 50 வேகன்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்ற்றது. இன்று காலை முதல் சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன” என்று ரயில்வே அதிகாரி தெரிவித்தார். 

.