This Article is From Mar 26, 2020

நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பு! முக்கிய பொருளாதார அறிவிப்புகள்!!

பொருளாதாரத்தை தாக்கத்தை சீர்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பு! முக்கிய பொருளாதார அறிவிப்புகள்!!

1 மணிக்கு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பு

ஹைலைட்ஸ்

  • நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பு
  • முக்கிய பொருளாதார அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு
  • முன்னதாக வரி தாக்கல் செய்ய 2020 ஜூன் 30 வரை கால நீட்டிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தைத் தாக்கத்தைச் சீர்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, சமீபத்தில் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும் இதை சரி செய்வதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பொருளாதார பணி குழு அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்த குழு சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசனை நடத்தி உரிய மீட்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்று மோடி கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய 2020 ஜூன் 30 வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. தாமதமாக செலுத்தப்படும் வருமான வரிக்கான வட்டி 12 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ஆதார்-பான் இணைப்புக்கான கெடு மார்ச் 31 வரையிலிருந்தது, அது ஜூன் 30ம் தேதிக்கு நீட்டிக்கப்படுகிறது உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். 

எனினும், இதில் நடுத்தர, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் எந்த ஒரு அறிவிப்புகள் வரவில்லை. இதைத்தொடர்ந்து, இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் இதுதொடர்பாக முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.