This Article is From Feb 28, 2019

ஒரு எலியை மீட்ட 8 பேர்... வைரல் சம்பவம்..!

ரெயின் நெக்கர் விலங்குகள் மீட்பு எலியின் புகைப்படத்தை பதிவித்திருந்தது

ஒரு எலியை மீட்ட 8 பேர்... வைரல் சம்பவம்..!

வைரலான எலியின் புகைப்படம்

ஜெர்மனியில், எட்டு பேர் சேர்ந்து ஒரு எலியை காப்பாற்றியுள்ளனர். அதன் புகைப்படம் தற்போது வைரல் ரகம்.

சற்று குண்டான எலி ஒன்று ஒரு ஓட்டையில் மாட்டி கொண்டது. அதனால் வெளியில் வர முடியாமல் அவதிப்பட்டது. அந்த எலியை மீட்க எட்டு பேர் கொண்ட குழு போராடியது. இறுதியில் அந்த எலி பத்திரமாக மீட்கப்பட்டது.

 

 
 

 

‘கடுங்குளிரால் அந்த எலியின் உடம்பில் பனி உறைந்து இருந்தது. அதனால் தான் எலி அவ்வாறு சிக்கிக் கொண்டது' என விலங்குகள் மீட்பாளர் மைக்கேல் ஷெர் தெரிவித்தார்.

 

 
 

 

இந்த புகைப்படம் பேஸ்புக்கில் ரெயின் நெக்கர் விலங்குகள் மீட்பு பக்கம் பதிவிட்டிருந்தது. அது தற்போது வைரல் ஆகி 1000க்கும் மேல் லைக்ஸ் குவித்துள்ளன.

 

 

இந்தப் புகைப்படத்திற்கு பலர் தங்களின் கமென்ட்ஸ் பதிவு செய்தனர்.

 

 

Click for more trending news


.