This Article is From Aug 08, 2020

காட்டுப் பன்றியிடம் இருந்து லேப்டாப்பை மீட்க, நிர்வாணமாக ஓடிய மனிதர்! வைரல் போட்டோ

பன்றியைப் பிடிக்க, இடுப்பில் ஒரு துண்டு துணி கூட இல்லாமல், வேகமாக துரத்திச் சென்றார்

காட்டுப் பன்றியிடம் இருந்து லேப்டாப்பை மீட்க, நிர்வாணமாக ஓடிய மனிதர்! வைரல் போட்டோ

லேப்டாப்பை தூக்கிச் சென்ற காட்டுப்பன்றி (கோப்புப் படம்)

ஹைலைட்ஸ்

  • ஏரியில் இயற்கையை ரசித்து குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணி
  • லேப்டாப் பையைத் தூக்கிச் சென்ற காட்டுப்பன்றி
  • காட்டுப்பன்றியைப் பிடிக்க ஏரியில் இருந்து நிர்வாணமாக வெளியே வந்தார்

ஜெர்மனியில் லேப்டாப்பை பையோடு தூக்கிச் சென்ற காட்டுப் பன்றியைப் பிடிப்பதற்காக, ஏரியில் குளித்துக் கொண்டிருந்தவர் நிர்வாணமாக ஓடிய புகைப்படம் வைரலாகியுள்ளது.

ஜெர்மனியின் பெர்லினில் உள்ள கிரன்வெல் வனப்பகுதியில் டீஃபெல்ஸி  என்ற அழகிய ஏரி உள்ளது. இங்கு பல பயணிகள் வந்து இயற்கை எழிலை ரசித்து விட்டு, ஏரியில் குளித்துச் செல்வார்கள். இப்படியான சூழலில் டீஃபெல்ஸி ஏரிக்கு உலா வந்த ஒருவர், இயற்கை சூழலை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தார்.

பின்னர், ஏரியில் குளிப்பதற்கு முடிவு செய்த அவர், தான் கொண்டு வந்த பொருட்கள், பைகளை எல்லாம் கரையில் வைத்துவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது அங்கு உணவு தேடி வந்த சில காட்டுப்பன்றிகள் இவரது பையை மோப்பம் பிடித்தது. பின்னர், பையில் இருந்த பீட்சா, பர்கர் உணவுகளை சாப்பிட்டது. 

ஏரியில் குளித்துக் கொண்டிருந்த நபர் திடீரென கரையைப் பார்த்த போது, பன்றிகள் பையை கவ்விக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அப்போது தான் அவருக்கு பையில் விலையுர்ந்த லேப்டாப் இருந்தது நினைவிற்கு வந்தது. 

பதற்றத்தில் நிர்வாணமாக இருக்கிறோம் என்பதையும் மறந்து கரையை நோக்கி வந்தார். இவர் வருவதைப் பார்த்த பன்றிகள், லேப்டாப் பையை லாவகமாக வாயில் கவ்வி எடுத்துச் சென்றது. பன்றியைப் பிடிக்க அந்த மனிதரும், இடுப்பில் ஒரு துண்டு துணி கூட இல்லாமல், வேகமாக துரத்திச் சென்றார்.

இந்த சம்பவத்தை அடீல் லேண்டவுர் என்ற சுற்றுலா பயணி அப்படியே போட்டோ எடுத்து விட்டார். பின்னர், அந்த மனிதரின் அனுமதியோடு ஃபேஸ்புக், டுவிட்டர் என சமூகவலைதளங்களில் பதிவிட்டார். அந்தப் படம் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களைப் பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கானோர் கமெண்ட் செய்துள்ளனர்.

காட்டுப் பன்றிகளிடம் இருந்து லேப்டாப்பை மீட்பதற்காக, மனிதர் நிர்வாணமாக ஓடிய படத்தை பார்ப்பதற்கு இங்குக் க்ளிக் செய்யவும்.

Click for more trending news


.