This Article is From Apr 04, 2020

வான்ட்டடா கொரோனா வைரஸை உடலில் ஏற்றிக்கொண்ட மேயர்!! காரணம் தெரியுமா?

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. இங்கு 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1200 பேர் உயிரிழந்துள்ளனர்.

வான்ட்டடா கொரோனா வைரஸை உடலில் ஏற்றிக்கொண்ட மேயர்!! காரணம் தெரியுமா?

பெர்லின் நகர மேயர் ஸ்டீபன் வோன் டாசல்.

ஹைலைட்ஸ்

  • வேண்டுமென்றே மனைவியிடமிருந்து கொரோனாவை பெற்றுள்ளார் பெர்லின் மேயர்
  • நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்க கொரோனாவை பெற்றதாக கூறியுள்ளார்
  • மேயர் பொறுப்பற்று செயல்படுவதாக பல்வேறு தரப்பினர் விமர்சனம்

உலக நாடுகளை நடு நடுங்கச் செய்துவரும் கொரோனா வைரஸை, யாரேனும் வேண்டுமென்றே உடலில் ஏற்றிக்கொண்டால் அவர்களை என்னவென்று அழைப்பார்கள்? அப்படி நினைத்துப்பார்க்க முடியாத காரியத்தை செய்திருக்கிறார் ஜெர்மனியின் பெர்லின் நகர மேயர் ஸ்டீபன் டாசல்.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. இங்கு 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1200 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் பெர்லின் நகரத்தின் மேயர் ஸ்டீபன் டாசலின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒரே வீட்டில் இருந்த இருவரும் முதலில் சுயதனிமைப்படுத்திக் கொண்டனர்.

ஆனால், டாசல் கொரோனாவைப் பற்றி கவலைப்படாமல் மனைவியுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார். இதனால் அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பெரிய அளவில் தன்னை கொரோனா பாதிக்காது என்று டாசல் நினைத்திருந்தார்.

ஆனால் உள்ளே புகுந்த கொரோனா அவரை, கலங்கடித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டாசல் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

நான் வேண்டுமென்றேதான் மனைவியிடம் இருந்து கொரோனாவை பெற்றுக் கொண்டேன். கொரோனா உள்ளே வந்து விட்டால் 3 நாட்களுக்குள் அதற்கான எதிர்ப்பு சக்தியை உடல் உற்பத்தி செய்துகொள்ளும் என்று நினைத்திருந்தேன். 3 நாட்களில் சரியாகிவிடும் என கருதினேன்.

ஆனால் நான் நினைத்ததை விட கொரோனா என்னை கொடூரமாக நடத்தியது. நோய் எதிர்ப்பு சக்தியை எனது உடலில் உற்பத்தி செய்து கொள்வதற்காகத்தான் நான் கொரோனாவை பெற்றுக்கொண்டேன். ஒரே வீட்டில் இருப்பவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது என்பது இயலாத காரியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். டாசலுக்கு 53 வயதாகிறது. ஒரு நகரத்தின் மேயராக இருப்பவரே இப்படி பொறுப்பற்று நடந்து கொள்ளலாமா என்று பல்வேறு தரப்பினர் அவரை வசைபாடி வருகின்றனர்.

.